ADDED : ஏப் 12, 2025 05:06 AM
கோயில்
திருக்கல்யாண உற்ஸவம் - மஞ்சள்நீர் சாற்றுமுறை: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், காலை 8:00 மணி.
8வது ஆண்டு பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு108 மணி நேரம் அகண்டநாமம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
பங்குனி திருவிழா - முளைப்பாரி எடுத்தல்: சக்தி மாரியம்மன் கோயில், மேலுார், மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணம் - ஸ்ரீபகவான் ரமணரின் சத்தர்ஸனம் குறித்த விளக்கவுரை: சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்திநகர், மதுரை, காலை 9:15 மணி.
தாயுமானவர் - நிகழ்த்துபவர்: சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
பொது
கல்விக்கூடங்களில் கம்பர் - மாநில அளவிலான பேச்சுப்போட்டிகளின் நிறைவு பரிசளிப்பு விழா: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: தலைவர் ஹரி தியாகராஜன், பரிசளிப்பவர்: கவர்னர் ஆர்.என். ரவி, பங்கேற்பு: சாஸ்தரா பல்கலை துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியம், மதியம் 3:00 மணி.
விசுவாவசு வருட பஞ்சாங்கம் வெளியீடு: மகாபெரியவா கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, வெளியிடுபவர்: தாம்பிராஸ் மாநில துணைத்தலைவர் ராம்ஜி, முதல் பிரதியை பெறுபவர்கள்: பட்டாபிராமன், அனுஷனத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, ஏற்பாடு: தாம்பிராஸ் சங்கம், காலை 9:30 மணி.
பவுர்ணமி தீபாராதனை: வைகையாறு, யானைக்கல், மதுரை, தலைமை: தலைவர் ராஜன், ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், மாலை 6:00 மணி.
மதுரை இயற்கை சந்தை - பாரம்பரிய உணவு கண்காட்சி, விருந்து: காந்தி மியூசியம், மதுரை, காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
பொதுவிநியோக திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம்: குடிமைப்பொருள் தாசில்தார் அலுவலகங்கள், மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
கோடை கால யோகா பயிற்சி: ஐ.ஜி.எஸ்.ஆர். அரங்கம், காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய யோகா ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், பயிற்சியாளர்கள்: லோகப்ரியா, பழனிகுமார், ஏற்பாடு: காந்தி மியூசியம், காலை 10:30 மணி மற்றும் மாலை 4:30 மணி.
தெருக்குழந்தைகளுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு உலகத்தமிழ்மாமன்ற செயற்குழுக்கூட்டம்: ஓட்டல் பியர்ல்ஸ், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை, தலைமை: பொதுச்செயலாளர் கருப்பையா, பங்கேற்பு: மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ரமேஷ், ஆந்திரா சித்துார் அம்மாவோடி தீபிகா சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் பத்மநாபன், மாலை 4:30 மணி.
காந்திய சிந்தனைப் பேராசிரியர்களுக்கான உயர்நிலைப்பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, பங்கேற்பு: தேசிய காந்தி மியூசியம் இயக்குநர் அண்ணாமலை, கர்நாடகா காந்தி நினைவு நிதி இயக்குநர் சிவராஜ், ஏற்பாடு: மதுரை காந்தி மியூசியம், காலை 10:00 மணி.
விசுவாவசு வருட பஞ்சாங்கம் வாசித்தல்: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, கீழவாசல், மதுரை, விளக்கம் சொல்பவர் : எம்.வி. சுப்புராமன், மாலை 6:30 மணி.

