ADDED : ஜூன் 22, 2025 03:06 AM
கோயில்
ஆனி கிருத்திகை சிறப்பு பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:30 மணி.
சர்ச் திருவிழா: இடைவிடா சகாய அன்னை சர்ச், அஞ்சல் நகர், மதுரை, திருப்பலி, காலை 7:30 மணி, நவநாள் சிறப்புத் திருப்பலி, தலைமை: நாகமலை அமைதியின் அரசி சர்ச் பாதிரியார் ஜோசப் அந்தோணி, மதுரை மறைமாவட்ட ஆர்.சி.பள்ளிகள் கண்காணிப்பாளர் இன்னாசி அற்புதராஜ், மாலை 5:45 மணி.
சர்ச் திருவிழா: துாய பவுல் சர்ச், பாஸ்டின் நகர், மதுரை, ஜெபமாலை வழிபாடு, நவநாள் திருப்பலி, மாலை 6:00 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 முதல் 10:15 மணி வரை, தாயுமானவர் சுவாமி பாடல்கள் விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.
வாழ்வின் நோக்கம்: நிகழ்த்துபவர் - பிரேம குமாரி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சத்சங்கம், கீதை பாராயணம், திருக்குறள்: நிகழ்த்துபவர் - கிருஷ்ணானந்த சைதன்யா, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:30 மணி.
பள்ளி, கல்லுாரி
உரிமைத் திருவிழா: துாய மரியன்னை மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: இயக்கத் தலைவர் உமாதேவி, சிறப்பு விருந்தினர்கள்: மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் பொன்னுராம், பிரவீனா, அசோக், காலை 10:00 மணி, கலை நிகழ்ச்சிகள், ஏற்பாடு: விடியல் குழந்தை உரிமைகள் இயக்கம், மதியம் 2:00 மணி.
பொது
முருக பக்தர்கள் மாநாடு: வண்டியூர் ரிங் ரோடு, மதுரை, கலை நிகழ்ச்சிகள், மதியம் 3:00 மணி, துவக்க விழா, மாலை 4:00 மணி, லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டாக கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்வு, மாலை 6:00 மணி, சிறப்புரை: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மாலை 6:30 மணி, அறுபடை வீடுகளின் அருட்காட்சி, ஏற்பாடு: ஹிந்து முன்னணி, காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை.
புதிய ஆயுர்வேத சிகிச்சை, பயிற்சி அறைகள் திறப்பு: சிவானந்தா யோகா வேதாந்தா மீனாட்சி ஆசிரமம், சரந்தாங்கி, மதுரை, முன்னிலை: சென்னை ஜெம் குரூப் ஆப் கம்பெனி சேர்மன் வீரமணி, திறந்து வைப்பவர்: மாநகராட்சி கமிஷனர் சித்ரா, காலை 8:00 மணி.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான இலவச பயிற்சி: கோவிந்த தாஸ சேவா ஸமாஜம், மஹால் 6வது தெரு, மதுரை, தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, மீனாட்சி நகர் மெயின் ரோடு, வில்லாபுரம், மதுரை, என்.கே.குப்பய்யன் ரத்னமணி பள்ளி, கைத்தறிநகர், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
மதுரை தபால்தலை நிபுணர்கள், நாணயவியல் வல்லுநர்கள் சங்க கூட்டம்: சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: செயலாளர் சண்முகலால், காலை 10:30 மணி.
இசை நிகழ்ச்சி: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, பாட்டு: அனிருத் சுப்ரமணியன், வயலின்: சின்மயி, மிருதங்கம்: சர்வஜித் கிருஷ்ணா, ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மாலை 6:30 மணி.
மாணவர்களுக்கு பாட நோட்டுகள், சீருடைகள் வழங்கும் விழா: மதுரை ஆயிரவைசிய மஞ்சப்புத்துார் மக்கள் சமூக நலச்சங்கம், காந்திநகர், மதுரை, தலைமை: சங்கத் தலைவர் பொன்னம்பலம், சிறப்பு விருந்தினர்கள்: மதுரை அத்தியாயம் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் தலைவர் உதயகுமார், தியாகராஜர் கல்லுாரி உதவிப் பேராசிரியர் சங்கீத் ராதா, மாலை 5:00 மணி.
இலவச தமிழ் இலக்கிய வகுப்புகள்: விவேகானந்தர் நுாலகம், வடக்குத் தெரு, அனுப்பானடி, மதுரை, நடத்துபவர்: நுாலக கண்காணிப்பாளர் மூர்த்தி, காலை 10:00 முதல் 12:00 மணி வரை.
பள்ளி மாணவர்களுக்கு இலவச மிருதங்கம், ஹார்மோனியம் வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதியம் 2:00 முதல் மாலை 4:30 மணி வரை.
கண்காட்சி
ஆர்க்மேட் 2025 - கட்டட பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மதுரை ஆர்க்கி சொஸைட்டி, தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்க்கிடெக்ட் மதுரை கிளை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.