ADDED : ஜூலை 04, 2025 03:14 AM
கோயில்
ஊஞ்சல் உற்ஸவம் 5ம் நாள் - சிறப்பு பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்தரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.
உற்ஸவ விழா: பாதாள மாரியம்மன், முனியாண்டி சுவாமி கோயில், மணிநகரம் மெயின் ரோடு, மதுரை, அம்மன் அழைப்பு அதிகாலை 5:30 மணி, அலங்காரம், பூஜை, இரவு 7:00 மணி.
திருவிளக்கு பூஜை : வெள்ளை விநாயகர் கோயில், நேதாஜி தெரு, சதாசிவ நகர், அண்ணா நகர், மதுரை, மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருக்குறள்: நிகழ்த்துபவர் - பெரியகருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சிவபுராணம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துவோர் - கீதாபவனம் பாராயணக்குழு, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
நாராயணீயம்: நிகழ்த்துபவர் - சுப்பராமன், வேதானந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
'தமிழுக்கு அமுதென்று பேர்' - நித்தியானந்த சுவாமிலவாரு அறக்கட்டளை சொற்பொழிவு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராம சுப்பையா, சிறப்புரை: சென்னை அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் கோதண்டராமன், பங்கேற்பு: கல்லுாரி தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், உப தலைவர் ஜெயராம், உதவிச் செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் ஆழ்வார்சாமி, மதியம் 12:10 மணி.
சுவாமி விவேகானந்தரின் 123 வது ஆண்டு நினைவு நாள்: மதுரைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: தலைமையாசிரியர் பாலாஜி ராம், முன்னிலை: நேதாஜி தேசிய இயக்க ஒருங்கிணைப்பாளர் நேதாஜி சுவாமிநாதன், காலை 9:00 மணி.
பொது
போதை மறுவாழ்வு பயிற்சி வகுப்பு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, லட்சுமி நகர் 3வது தெரு, சவுராஷ்டிராபுரம் பஸ் ஸ்டாப், வண்டியூர், மதுரை, பயிற்சியாளர்: ராகேஷ் பாபு, மாலை 6:30 மணி.
குழந்தைகள் நலப் பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: வள்ளலார், மாலை 5:15 மணி.
சுவாமி விவேகானந்தர் நினைவு சிறப்பு சர்வ சமய அமைதிப் பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய்நகர், மதுரை, அருட்செய்தி வழங்குபவர்: வள்ளலார் இயற்கை அறிவியல் மையம் நிறுவனர் ஆதிரை சசாங்கன், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.
வேளாண் சார்ந்த தொழில் துவங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.ஒரு கோடி வரை மானியத்துடன் வங்கிக்கடன் பெற இலவச பயிற்சிக்கான நேர்காணல்: சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம், டி.பி.ரோடு, மஹபூப்பாளையம், காலை 9:00 மணி.
கண்காட்சி
மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி, விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.