ADDED : ஜூலை 13, 2025 04:39 AM
கோயில்
கும்பாபிஷேகம் - யாகசாலை பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மங்களவாத்தியம், காலை 7:00 மணி, ஆறாம் கால யாக பூஜைகள், காலை 8:30 முதல் மதியம் 11:30 மணி வரை, வேத, திருமுறை பாராயணம், மாலை 4:30 மணி, ஏழாம் கால யாக பூஜைகள், மாலை 4:20 மணி முதல் இரவு 8:15 மணி வரை, மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரப் பெருமானை பதினாறுகால் மண்டபம் அருகில் வரவேற்றல், இரவு 9:00 மணி.
கும்பாபிஷேகம்: பூர்ண புஷ்கலா வில்லாயுதமுடைய அய்யனார், முத்தையா கருப்பையா சுவாமி, நாகப்ப சுவாமி கோயில், கோச்சடை, மதுரை, நான்காம் கால வேள்வி ஆரம்பம், பூஜைகள், காலை 4:15 முதல் 7:15 மணி வரை, கும்பாபிஷேகம், காலை 7:15 மணி முதல் 8:15 மணி வரை, அன்னதானம், காலை 9:00 மணிக்கு மேல்.
கோயில் உற்ஸவம் : பாதாள மாரியம்மன், முனியாண்டி சுவாமி கோயில், மணிநகரம் மெயின் ரோடு,மதுரை, அம்மன், சுவாமிகள் முளைப்பாரி கரைக்க வைகை ஆற்றுக்கு செல்லுதல், காலை 5:30 மணி, மஞ்சள் நீராட்டு விழா, காலை 9:00 மணி, விளையாட்டுப் போட்டிகள், மதியம் 3:00 மணி.
வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, தீபாராதனை, காலை 9:00 மணி.
94ம் ஆண்டு உற்ஸவம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், 118, புட்டுத்தோப்பு ரோடு, மதுரை, அன்னதானம், காலை 11:00 மணி, சிறப்பு நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.
56ம் ஆண்டு உற்ஸவம்: சந்தன மாரியம்மன் கோயில், மெயின் ரோடு, சொக்கலிங்கநகர், மதுரை, அன்னதானம், காலை 11:00 மணி, மஞ்சள் நீராட்டு விழா, மதியம் 3:00 மணிக்கு மேல் மாலை 4:00 மணி வரை, கலை நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.
ஆனி பிரமோற்ஸவ நிகழ்ச்சி: ஸ்ரீநிவாச பெருமாள் தேவஸ்தானம், மீனாட்சிபுரம் 2வது தெரு, மதுரை, கொடியேற்றம், காலை 8:30 மணி, பேரிதாடனம், தேவதாஹ்வானம், மாலை 4:00, ஹம்ச வாகனத்தில் வீதி புறப்பாடு, இரவு 7:00 மணி.
நாம சங்கீர்த்தனம், சத்குரு ஞானானந்த பஜன் மண்டலி, 23. டி. சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை. மாலை 4:00 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
வரமும் அருளும்: நிகழ்த்துபவர் --- கணேசன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
சுவாமி சிவானந்தர் மகா சமாதி தின விழா: விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆனந்தகுடீர் வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், ஏற்பாடு: ஆனந்த குடீர் அமைப்பு, மாலை 5:30 மணி.
ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாம பாராயணம்:நிகழ்த்துபவர் - சுவாமி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை, ஸ்ரீ பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 முதல் 10:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள், இரவு 7:00 முதல் 8:00 மணி வரை.
பொது
பார்ச்சூன் சிட்டி வெற்றி விழா: ஜி ஸ்கொயர் பார்ச்சூன் சிட்டி, கப்பலுார், சிறப்பு விருந்தினர்கள்: பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, நடிகர் மதுரை முத்து, மாலை 5:00 மணி முதல்.
உணவுத் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, 12வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி, பெண்களுக்கான கோலப் போட்டி, ஏற்பாடு: மதுரை மாநகராட்சி, மாலை 4:00 மணி.
கோயில் உழவாரப் பணி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, வீரராகவப் பெருமாள் கோயில், வண்டியூர், ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம்,காலை 9:30 மணி முதல்.
மக்கள் நல இளைஞர் பேரவையின் 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு பள்ளி உபகரணங்கள், மதிய உணவு வழங்குதல்: அரசு குழந்தைகள் இல்லம், காந்தி மியூசியம் அருகில்,மதுரை, தலைமை: சட்ட ஆலோசகர் தர்மராஜ், துவக்கவுரை:மாவட்ட ஓட்டல்கள் சங்கத்தலைவர் குமார், பங்கேற்பு: கவுன்சிலர் நுார்ஜஹான், பெண்ணிய கல்வி மையம் நிர்வாகி ஜமுனாராணி, ஓய்வுபெற்ற வானொலி மைய அலுவலர் சுந்தர ஆவுடையப்பன், காலை 11:30 மணி.
மருத்துவம்
பொது மற்றும் எலும்பு நோய் குறித்த விழிப்புணர்வு முகாம்: சிறுவாணி நதித்தெரு, மகாத்மா காந்தி நகர், மதுரை, பங்கேற்பு: டாக்டர்கள் மீனலதா, மிதுன் பிரகாஷ், ஏற்பாடு: சிறுவாணி நதித்தெரு குடியிருப்போர் சங்கம், சுகப்பிரியா சிறப்பு மருத்துவமனை, காலை 10:00 - மதியம் 2:00 மணி வரை.
கண்காட்சி
சித்திர மாடம் புகைப்பட, சிற்பக்கலை கண்காட்சி: சித்திர மாட அரங்கம், காமராஜர் ரோடு, மதுரை, திறந்து வைப்பவர்: பேராசிரியர்ஞானசம்பந்தன், கண்காட்சி துவக்கி வைப்பவர்: ஜே.சி., ரெசிடென்சி குழும இயக்குநர் ரிஷ்வந்த் ஜெயபால், ஏற்பாடு: மதுரை போட்டோகிராபி கவுன்சில், மதுரை மாவட்ட போட்டோ ஸ்டுடியோ சங்கம், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி.
மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.
யோகா
யோகாசனா, பிராணயாம வகுப்புகள்: சின்மயா மிஷன், கோச்சடை, மதுரை, காலை 6:30 மணி.