ADDED : ஜூலை 25, 2025 03:34 AM
கோயில் ஆடி உற்ஸவம் கொடியேற்றம்: சமயபுரம் மாரியம்மன் கோயில், 3வது செக்டர், மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு, மதுரை, அம்மனுக்கு காப்பு கட்டுதல், முளைப்பாரி முத்து பரப்புதல், மாலை 6:00 மணி.
ஆடி வெள்ளியை முன்னிட்டு ராகு கால பூஜை: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காலை 10:30 மணி.
ஆடி வெள்ளியை முன்னிட்டு கஞ்சி வார்த்தல்: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, துர்கா பரமேஸ்வரி, கருமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, உற்ஸவருக்கு பால் அபிஷேகம், காலை 9:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்தரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.
ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு லலிதா சஹஸ்ரநாம பாராயணம், காஞ்சி காமகோடி மடம், முள்ளிப்பள்ளம் கிளை, சோழவந்தான், மாலை 6:00 மணி.
ஆடி வெள்ளி விளக்கு பூஜை, தாம்பிராஸ் டிரஸ்ட் கல்யாண மகால், சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 6:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், எஸ்.எஸ்.காலனி கிளை.
திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
நாராயணீயம் பாராயணம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 5:00 மணி, பிரசாதம் வழங்குதல் இரவு 7:30 மணி.
திருவருட்பா, தேவாரம் பாராயணம்: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட் பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.
சத்சங்கம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர்கள் - கீதாபவனம் பாராயணக்குழு, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, மாலை 6:00 மணி.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம், லட்சுமி விநாயகர் கோயில், மகாலட்சுமி நகர் 4வது தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி இந்திய விண்வெளி மற்றும் பாதுகாப்பில் வளர்ச்சி, எதிர்கொள்ளும் சவால்கள் - கருத்தரங்கு: கே.எல்.என்., பொறியியல் கல்லுாரி, பொட்டப்பாளையம், மதுரை, தலைமை: தலைவர் கே.என்.கே.கார்த்திக், சிறப்புரை: தாளாளர் கே.என்.கே.கணேஷ், சிறப்பு விருந்தினர்: இஸ்ரோ முன்னாள் தலைமை பொது மேலாளர் சிவசுப்பிரமணியன், காலை 9:30 மணி.
தெரு நாடகம் குறித்து இரண்டு நாள் பயிற்சி: மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் தர்மசிங், சிறப்பு விருந்தினர்: புதுடில்லி தேசிய நாடகப் பள்ளி ஆசிரியர் பூமிநாதன், காலை 9:00 மணி.
முதுகலை சங்கம் துவக்கவிழா: சவுராஷ்டிர கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரி பேராசிரியர் தேன்மொழி, ஏற்பாடு: முதுகலை ஆங்கிலம் மற்றும் ஆராய்ச்சி துறை, காலை 10:00 மணி.
மூதறிஞர் இளங்குமரனார் நினைவு கருத்தரங்கம்: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: நான்காம் தமிழ்ச்சங்கம் செயலாளர் மாரியப்பமுரளி, சிறப்பு விருந்தினர்கள்: வக்பு வாரிய கல்லுாரி முன்னாள் தமிழ்த்துறை பேராசிரியர் ஷாகுல் ஹமீது, காலை 10:00 மணி.
ஷேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ' தழுவலில் நாடகம்: லேடி டோக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, இயக்கம்: ஆங்கிலத் துறை பேராசிரியர் கீர்த்தனா, ஏற்பாடு: ஆங்கிலத் துறை, காலை 9:00 மணி, 11:00 மணி, மதியம் 2:30 மணி.
அறிவியல் கலை பயிற்சி: சவுராஷ்டிர கல்லுாரி, விளாச்சேரி மெயின் ரோடு, மதுரை, தலைமை: முதல்வர் ஸ்ரீனிவாசன், சிறப்பு விருந்தினர்: அமெரிக்கன் கல்லுாரி பேராசிரியர் கண்ணன், காலை 10:00 மணி.
பொது மடீட்சியா சார்பில் 'இன்ட் எக்ஸ்போ' தொழில் கண்காட்சி - துவக்க விழா: ஐடா ஸ்கட்டர், ரிங் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் கோடீஸ்வரன், துவக்கி வைப்பவர்: தமிழக அரசு எம்.எஸ்.எம்.இ., துறை செயலாளர் அதுல் ஆனந்த், கண்காட்சி மலர் வெளியிடுபவர்: கலெக்டர் பிரவீன் குமார், காலை 10:25 மணி, பார்வையாளர் நேரம்: காலை 10:30 முதல் இரவு 7:30 மணி வரை.
மத்திய அரசின் ஓய்வூதியர்களுக்கு எதிரான சட்டவிரோத செயலை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்: தமுக்கம் தமிழ் அன்னை சிலை முதல் காந்தி மியூசியம் வரை, மதுரை, தலைமை: கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் பிச்சைராஜன், ஏற்பாடு: மத்திய மாநில அரசு ஓய்வூதியர், பொதுத்துறை ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்புக் குழு, காலை 10:00 மணி.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்: பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை, தலைமை: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குப்புஜோதிகுமார், ஏற்பாடு: சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
குறுந்தானிய உணவு வகைகள் பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, பயிற்றுநர்: மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:30 மணி, சர்வ சமய வழிபாடு, தலைமை: செயலாளர் நந்தாராவ், மாலை 4:30 மணி.
மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு பயிற்சி, கருத்தரங்கு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: சொக்கிகுளம் 'வாப்ஸ்' தொண்டு நிறுவனம், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
சர்வ சமய பிராத்தனை: சேர்வாலயம் மாணவர் இல்லம், ஷெனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், சிறப்புரை: வழக்கறிஞர் கமலானந்த், மாலை 6:00 மணி.
கண்காட்சி ஹஸ்தகலா - கைவினைப் பொருட்கள், ஜூவல்லரி கண்காட்சி: ஜே.சி. ரெசிடன்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.