ADDED : ஆக 10, 2025 04:00 AM
கோயில் ஆடிப்பெருந்திருவிழா 10ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர் கோவில், தீர்த்தவாரி, காலை 9:00 மணி, சப்தாவர்ணம் விழா நிறைவு, புஷ்பவிமானம், வள்ளி திருமணம் நாடகம், இரவு 7:00 மணி.
ஆண்டு விழா: காளியம்மன் கோயில், எஸ்.எஸ். காலனி, மதுரை, அன்னதானம், மதியம் 12:00 மணி, மஞ்சள் நீராட்டு விழா, மதியம் 3:00 மணி.
பொங்கல் உற்ஸவம்: விநாயகர் காளியம்மன் கோயில், வீரமுடையான் கீழமுத்துப்பட்டி, சக்தி கிடா வெட்டுதல், காலை 7:00 மணி.
ஆண்டு விழா: பூமாரியம்மன் கோயில், மேட்டுத்தெரு, பெத்தானியாபுரம், கொடி இறக்கி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, காலை 7:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி.
கருப்பண சுவாமிக்கு சந்தன சாத்துபடி மறுபூஜை விழா: சப்தகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், தென்பரங்குன்றம், குதிரை வாகன அலங்காரத்தில் சுவாமி, பொங்கல் பிரசாதல் வழங்குதல், மாலை 4:00 மணி முதல்.
அவிட்டம் நட்சத்திரம் சிறப்பு பூஜை: காஞ்சி காமகோடி மடம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, நித்யபூஜை, ஹோமம், காலை 6:00 மணி, ராமானந்த சரஸ்வதி சுவாமிகளின் நாமசங்கீர்த்தனம், மாலை 6:00 மணி, பிரசாதம் வழங்குதல், இரவு 9:00 மணி.
காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா, காஞ்சி காமகோடி மடம், முள்ளிப்பள்ளம் கிளை, மாலை 4:00 மணி.
கிருஷ்ண ஜெயந்தி விழா, கோபகுடீரம், குழந்தைகள் நிகழ்ச்சி மாலை 4:30 மணி, ஹரிஹர சுப்பிரமணிய பாகவதரின் ஸ்ரீமத் பாகவதம், பக்தி சொற் பொழிவு, மாலை 6:00 மணி, சுவாமி புறப்பாடு இரவு 7:30 மணி, நாமத்துவார் பிரார்த்தனை மையம், அய்யர்பங்களா, மதுரை.
கிருஷ்ண ஜெயந்தி விழா கொடியேற்றம்: கிருஷ்ணன் கோயில், மேலுார், காலை 9:30 மணி.
மாதாந்திர உழவாரப் பணி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, வீரராகவப் பெருமாள் கோயில், வண்டியூர், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 முதல்.
பக்தி சொற்பொழிவு ராமக்கிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்க பிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை, ரமணரின் சத்தர்ஸனம், வழங்குபவர் - சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, காலை 9:15 முதல் 10:15 மணி வரை, தாயுமானவர் சுவாமி பாடல்கள், நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 முதல் 8:00 மணி வரை.
பாகவத புராணம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி.
பொது குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவை 21வது ஆண்டு விழா: ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் ஹால், கே.கே.நகர், மதுரை, மாறுவேட, பேச்சு மற்றும் பாட்டுப்போட்டிகள், சிறப்புரை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி விக்டோரியா கவுரி, தலைமை: தலைவர் முத்தம்பெருமாள், பரிசு வழங்குபவர்: போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா, ஒருங்கிணைப்பு: பொதுச்செயலாளர் சந்திரசேகரன், காலை 9:00 மணி முதல்.
தொழில் வர்த்தக கண்காட்சி நிறைவு விழா: ராஜ்பாலா மகால், காமராஜர் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: அமைச்சர் மூர்த்தி, பேசுபவர்: பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி, சிறப்பு விருந்தினர்: ஜே.பி., ஹைட்ராலிக்ஸ் நிர்வாக இயக்குநர் பன்சிதார், முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ். சரவணன், ஏற்பாடு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், மதியம் 3:30 மணி.
கோமதிபுரம் தென்றல் குடியிருப்போர் சங்கம் வருடாந்திர கூட்டம்: சங்க வளாகம், 433, பாரிஜாதம் வீதி, கோமதிபுரம், மதுரை, தலைமை: தலைவர் ராகவன், காலை 10:00 மணி.
காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு மாணவர்களுக்கு உதவித்தொகை, நோட்டு புத்தகங்கள் வழங்குதல்: தில்லை சிதம்பர நாடார் - சீனியம்மாள் சமுதாயக்கூடம், முனிச்சாலை ரோடு, மதுரை, சிறப்புரை: வடமலையான் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் புகழகிரி, தலைமை: தலைவர் அன்பரசன், ஏற்பாடு: முனிச்சாலை நாடார் உறவின்முறை, மாலை 6:05 மணி.
வணிகர் சங்கங்களின் பேரவை நிறுவனர் வெள்ளையன் முதலாம் ஆண்டு நினைவு நாள் ரத்ததான முகாம்: சவுராஷ்டிரா கிளப், தெப்பக்குளம், மதுரை, தலைமை: வெள்ளையன் அறக்கட்டளை தலைவர் ராஜபாண்டியன், காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை.
யோகா வகுப்பு துவக்கம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், சிறப்புரை: மகரிஷி யோகா ஆழ்நிலை தியானம் பயிற்சியாளர் தனபாலன், துவக்கவுரை: காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், காலை 10:00 மணி முதல்.
குப்பை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி: வெங்கடாஜலபதி நகர் வைகை ஆற்றுக்கரை, துவரிமான், ஏற்பாடு: வெங்கடாஜலபதி குடியிருப்போர் நலச்சங்கம், காலை 7:45 மணி.
இசை நிகழ்ச்சி: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், மதுரை, பாடுபவர் - பாலமுரளி கிருஷ்ணா, வயலின் - பாஸ்கர், மிருதங்கம் - சுந்தர் குமார், கஞ்சிரா - கிரிதரபிரஷாத், ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி.
தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி., பட்டியலில் இணைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: செயின்ட் மேரீஸ் சர்ச் வளாகம், மதுரை, தலைமை: மதுரை உயர் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி சவரிமுத்து, மதுரை ராமநாதபுரம் திருமண்டல பிஷப் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன், காலை 9:30 மணி.
வணிக வளர்ச்சி கருத்தரங்கம்: அசல் மலபார் பீடி மாளிகை, அவனியாபுரம், மதுரை, தலைமை: சங்கத் தலைவர் மோகன், முன்னிலை: துணை தலைவர்கள் இளங்கோவன், கலைமணி, நடராஜன், பேசுபவர் : இதயம் எண்ணெய் நிறுவனத்தலைவர் முத்து, ஏற்பாடு: மதுரை நுகர்பொருள், ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கம், மாலை 5:00 மணி.
தியானம் தியான வகுப்புகள்: வி.எஸ்.செல்லம் செஞ்சுரி மகால், காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா சன்னியாசிகள், காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை.
மருத்துவம் இலவச மருத்துவ முகாம், உடல்நல பரிசோதனை: மாநகராட்சி திருமண மண்டபம், பழங்காநத்தம், மதுரை, தலைமை: ஏ.என்.டி., தலைவர் டாக்டர் ஜெயராஜசேகர், ஏற்பாடு: மதுரை காமராஜ் பல்கலை எம்.பி.ஏ., மாணவிகள், ஏ.என்.டி., கல்வி மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி.
இலவச மருத்துவ முகாம்: மதுரை அரசமரம் இசை இலக்கிய சங்கம், 36/28, கிருஷ்ணாபுரம் 1வது குறுக்குத்தெரு, காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: ஹேமந்த், சாய்ரூபா டிரஸ்ட், காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை.
விளையாட்டு தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: பா.ஜ., நகர் தலைவர் மாரி சக்கரவர்த்தி, துவக்கி வைப்பவர்: தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, திறன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, ஏற்பாடு: அகில இந்திய ஷெசிங்கன் இசின்ரு கராத்தே சங்கம், காலை 8:00 மணி.
கண்காட்சி கலாஷேத்ரா கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
கட்டில், மெத்தை, சோபா உள்ளிட்ட ஸ்மார்ட் ஹோம் மரச்சாமான்களுக்கான கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி.