ADDED : ஆக 29, 2025 03:49 AM
கோயில்
ஆவணி மூலத்திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை, காலை 9:30 மணி, சுவாமி தங்கச்சப்பரம், அம்மன் யானை வாகனத்திலும் உலா, இரவு 8:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.
ஆவணி மாத 2ம் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், புன்னகை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.
கும்பாபிஷேகம்: செல்வ விநாயகர் கோயில், கீழமாத்துார், காலை 9:15 மணி.
ஆவணி திருவிழா பால்குடம் எடுத்தல்:  தீப்பாஞ்சி அம்மன், பிரண்டிப்பட்டி, மேலுார், காலை 9:00 மணி.
முப்பெரும் விழா கொடியேற்றம்: ஆரோக்கிய அன்னை சர்ச், வாடிப்பட்டி, மாலை 6:00 மணி, தலைமை: மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி சவரி முத்து.
விநாயகர் சதுர்த்தி
356 விநாயகர் சிலைகளின் ஊர்வலம்: விளக்குத்துாண் போலீஸ் ஸ்டேஷன் முன் துவங்கி, மாசி வீதிகளில் வலம் வந்து, வைகை ஆற்றில் கரைப்பு, பங்கேற்பு: ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஏற்பாடு: ஹிந்து முன்னணி, மதியம் 3:00 மணி முதல்.
நாவலர் நகர் 1வது தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, விநாயகர் சிலை ஊர்வலம், மதியம் 2:00 மணி முதல்.
கல்யாண இன்ப விநாயகர் கோயில் சார்பில் கண்ணா போர்டிங், முனிச்சாலை பகுதியில், 5 அடி உயர சிலை வழிபாடு: சிறப்பு வழிபாடு, மாசி வீதிகளில் ஊர்வலம், ஏற்பாடு: ஹிந்து முன்னணி, மதியம் 1:00 மணி முதல்.
பக்தி சொற்பொழிவு
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி
ஏ.ஐ., அடிப்படையிலான சுவரொட்டி விளக்கக்காட்சி - ஹேக்கத்தான்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்: கியானைட் டெக்னாலஜிஸ் நிறுவனர் சூரிய பிரசன்னா, ஏற்பாடு: எம்.சி.ஏ., துறை, காலை 10:00 மணி.
பள்ளி,கல்லுாரி மாணவர்களுக்கான பாரதியார் நினைவு நாள் பேச்சுப் போட்டி: எம்.எல்.டபிள்யூ.ஏ., மேல்நிலைப் பள்ளி, மணிநகரம், மதுரை, ஏற்பாடு: மக்கள் சிந்தனைப் பேரவை, காலை 9:30 மணி.
ஆண்டு விழா, விளையாட்டு விழா, பெற்றோர் - ஆசிரியர் சங்க விழா: மதுரை பிள்ளைமார் சங்கம் மேல்நிலைப் பள்ளி,  சம்மட்டிபுரம், மதுரை, தலைமை: பள்ளி நிர்வாகக்குழு தலைவர் சண்முகவேல், சிறப்பு விருந்தினர்கள்: மாவட்ட கல்வி அலுவலர்கள் செந்தில்குமார், கணேசன், உடற்கல்வி ஆய்வாளர் வினோத், ராமநாதபுரம் சமஸ்தானம்  திவான் பழனிவேல் பாண்டியன், பள்ளித்துணை ஆய்வாளர் இந்திரா, மதியம் 2:00 மணி.
ஆண்டு விளையாட்டு விழா: அமுதம் மெட்ரிக் பள்ளி, பெருங்குடி, மதுரை, சிறப்பு விருந்தினர்: அவனியாபுரம் போலீஸ் உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன், காலை 8:00 மணி.
போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி: மீனாட்சி அரசினர் மகளிர் கல்லுாரி, மதுரை, துவக்கி வைப்பவர்: முதல்வர் வானதி, ஏற்பாடு: கல்லுாரியின் போதை தடுப்புக் குழு, காலை 10:00 மணி.
பொது
தினமலர், சத்யா இணைந்து வழங்கும் 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2025' - வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர்ஸ், பில்டிங், ஆட்டோமொபைல் எக்ஸ்போ: தமுக்கம் மைதானம், மதுரை, துவக்கி வைப்பவர்: மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், கண்காட்சி நேரம்: மதியம் 12:00 முதல் இரவு 9:00 மணி வரை.
கவுன்சில் கூட்டம்: மாநகராட்சி வளாகம், மதுரை, தலைமை: மேயர் இந்திராணி, காலை 10:00 மணி.
ஆணவக் கொலைகளுக்கு எதிராக ஓரணியில் தமிழகம் அணிவகுக்குமா - விவாத நிகழ்ச்சி: பி.சி.எஸ்., ஹால், லேடி டோக் கல்லுாரி அருகே, மதுரை, கருத்துரை: மா.கம்யூ., மாநிலப் பொதுச் செயலாளர் சண்முகம், எவிடென்ஸ் செயல் இயக்குநர் கதிர், மாலை 5:00 மணி.
'ஹெரிடேஜ் 2025' - மரபுகளை ஆராய்தல்: தானம் கல்வி நிலையம், வைத்தியநாதபுரம் கிழக்கு, கென்னட் கிராஸ் ரோடு, மதுரை, தலைமை: அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் வாசிமலை, சிறப்பு விருந்தினர்கள்: புதுடில்லி சாப்டர் டிவிஷன் இன்டாக் இயக்குநர் கேப்டன் அரவிந்த் சுக்லா, தொல்பொருள் ஆய்வாளர் வேதாச்சலம், பாத்திமா கல்லுாரி முதல்வர் பாத்திமா மேரி, சுற்றுலா வளர்ச்சி அலுவலர் பாரதி, காலை 10:00 மணி.
சர்வ சமய வழிபாடு: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், மாலை 4:30 மணி.
சுய வேலைவாய்ப்பு பயிற்சி நாள்: ஐ.ஜி.எஸ்.ஆர்., அரங்கம், காந்தி மியூசியம், மதுரை, பயிற்றுநர்: மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:30 மணி.
விளையாட்டு
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 8:00 மணி முதல்.

