ADDED : ஜன 31, 2026 06:32 AM
கோயில் தெப்ப உற்ஸவம் 11ம் நாள் - கதிரறுப்புத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன், சுவாமி தங்கபல்லக்கில் சிந்தாமணியில் எழுந்தருளுதல், காலை 9:00 மணி முதல்.
தைப்பூசத் திருவிழா - தங்கத் தேரோட்டம்: சோலைமலை கோயில், அழகர்கோவில், காலை 10:30 மணி, வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மாலை 6:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு பகவத் கீதை: நிகழ்த்துபவர் -- சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தர கண்ணன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - -சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால் தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்சனம் விளக்கவுரை, காலை 9:15 மணி.
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
சொற்பொழிவு, கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர்- ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி டி புஷ் 2026- தொழில்நுட்ப வணிக மாநாடு: ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், டி.வி.ஆர் நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, முன்னிலை: இயக்குநர் சுப்பிரமணியன், காலை 10:00 மணி.
பொது உங்களுக்குள் தலைமை பண்பு குறித்து சொற்பொழிவு: ஓட்டல் கோர்ட் யார்டு, அழகர்கோவில் ரோடு, மதுரை, பேசுபவர் - குருதேவ் ரவிசங்கர், ஏற்பாடு: ஆர்ட் ஆப் லிவிங், யங் இந்தியன்ஸ், சி.ஐ.ஐ., மாலை 4:00 மணி.
நிலையான நிதி சேர்க்கை குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான்: அரவிந்த் கண் மருத்துவமனை முதல் தமுக்கம் மைதானம் வரை, துவக்கி வைப்பவர்: கலெக்டர் பிரவீன்குமார், ஏற்பாடு: தானம் அறக்கட்டளை, காலை 7:00 மணி.
வைகைக்குயில் அறக்கட்டளை நிர்வாகக்குழு கூட்டம்: கனகவேல் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ், ஆபீசர்ஸ் டவுன், மீனாம்பாள்புரம், மதுரை, மாலை 5:00 மணி.
நுரையீரல் மருத்துவம், தீவிர சிகிச்சை மருத்துவ கருத்தரங்கம்: ஓட்டல் கோர்ட்யார்ட் மேரியாட், மதுரை, ஏற்பாடு: அப்பல்லோ மருத்துவமனை, மதியம் 2:00 மணி.
இசை நிகழ்ச்சி: ஓட்டல் தமிழ்நாடு (பார்ச்சூன் பாண்டியன்), மதுரை, குரலிசை- கிருத்திகா, வயலின்- ராஜிவ் முகுந்தன், மிருதங்கம்-அர்ஜூன் கணேஷ், கஞ்சிரா-ராஜகணேஷ், ஏற்பாடு: ராகப்ரியா சேம்பர் மியூசிக் கிளப் மதுரை, மாலை 6:00 மணி.
காங்கிரஸ் கட்சியின் 141ம் ஆண்டு துவக்க விழா: பங்குனி உத்திர மண்டபம், வண்டியூர், மதுரை, தலைமை: சங்க பொதுச் செயலாளர் கோபிநாத், வரவேற்புரை: தலைவர் ராஜசேகரன், ஏற்பாடு: மதுரை மாவட்ட இந்திரா காந்தி கைத்தறி, அமைப்புசாரா பொது தொழிலாளர் சங்கம், காலை 10:00 மணி.
வில்லாபுரம் அவனியாபுரம் தொழில் வர்த்தக சங்கம் பொதுக்குழுக்கூட்டம்: நாகரத்தினம் அங்காளம்மாள் மண்டபம், வில்லாபுரம், மதுரை, தலைமை: தலைவர் நாகரத்தினம், பங்கேற்பாளர்கள்: துணைத் தலைவர் தாமோதரன், பொருளாளர் மனோகரன், காலை 11:00 மணி.
இலவச எல்.ஈ.டி.பல்பு வழங்குதல், மின் சேமிப்பு விழிப்புணர்வு: தவசிபுதுார், தலைமை: யாதவர் கல்லுாரி முதல்வர் ராஜூ, ஏற்பாடு: இயற்பியல் துறை, காலை 10:00 மணி, மரம் வளர்ப்போம் பசுமை காப்போம்- விரிவாக்கப்பணி, ஆலாத்துார், முன்னிலை: ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பேராட்சி பிரேமா, துணைவட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா, ஊராட்சி செயலாளர் செண்பக மூர்த்தி, ஏற்பாடு: உயிர்வேதியியல், உயிரி தொழில்நுட்பவியல் துறை, காலை 11:30 மணி.
விளையாட்டு இளைஞர் விளையாட்டுத் திருவிழா - மாவட்ட அளவிலான கோலப்போட்டி, ஓவியப்போட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் துவக்கம்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 7:00 மணி.
மருத்துவம் பொது மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிக்குளம், மதுரை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.
கண்காட்சி கிரடாய் பேர்புரோ மதுரை 2026 - கட்டுமான நிறுவனங்களின் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

