ADDED : ஜன 31, 2026 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: சமயநல்லுாரில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் உள்ள காந்தி பெயரை மாற்றியதை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்.சி.,பள்ளி முன் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே முடிந்தது. நிர்வாகிகள் அ.தி.மு.க., மலையாளம், தி.மு.க., வீரக்குமார், மார்க்சிஸ்ட் தனபாலன், காங்., சுரேஷ், இந்திய கம்யூ.,கண்ணன், த.வெ.க., அருண்குமார், ம.தி.மு.க.,எழிலரசன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாகேந்திரன், வர்த்தக சங்கம் கனி, விவசாய தொழிலாளர் சங்க பிரேமலதா, சி.ஐ.டி.யு.,பாண்டியன் உட்பட 100 நாள் வேலை உறுதி திட்ட பயனாளிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விவசாய தொழிலாளர் சங்க உமா மகேஸ்வரர் நன்றி கூறினார்.

