UPDATED : ஜூன் 23, 2026 08:23 PM
ADDED : ஜூன் 23, 2026 07:51 PM
ஜூன் 24
கோயில் * கும்பாபிஷேகம்: கோதண்டராமர் கோயில், டி.வி.எஸ்., நகர், மதுரை, காலை 9:57 முதல் 10:17 மணிக்குள்.
* ஆனி ஊஞ்சல் உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நுாறு கால் மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஊஞ்சலில் எழுந்தருளி பொன்னுாஞ்சல் பாடுதல், மாலை 6:00 மணி.
* கும்பாபிஷேகம் : பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயில், சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, காலை 9:00 முதல் 9:30 மணிக்குள் , ஆனந்தி பூர்ணசந்திரன் குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி, மாலை 5:30 முதல் இரவு 7:00 மணி வரை, கருடசேவை புறப்பாடு, இரவு 7:00 மணி, மதுரை நாட்டிய கலாலயா சாந்தினி அருணகிரி மாணவிகளின் பரதநாட்டியம், இரவு 7:00 முதல் 8:00 மணி வரை, உயர்வற உயர் நலம் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- சண்முக திருக்குமரன், இரவு 8:00 முதல் 9:30 மணி வரை.
* கும்பாபிஷேகம்: மன்று கருப்பண சுவாமி கோயில், குலமங்கலம், காலை 10:35 முதல் 11:35 மணிக்குள், அன்னதானம், காலை 11:40 மணி.
* கும்பாபிஷேகம்: வழிவிடு முருகன் கோயில், ஜவஹர்புரம், மதுரை, ஹோமங்கள், பூர்ணாஹூதி, தீபாராதனை, காலை 9:00 மணி முதல்.
* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.
பக்தி சொற்பொழிவு * திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* அஷ்டாவக்கிர கீதை: நிகழ்த்துபவர் -- ஜனார்த்தனன், சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி முதல்.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
மருத்துவம் * உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை.
கண்காட்சி * அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
* கோ-ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயர்கண்ணி கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெங்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.
