தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 25, 2026 06:42 PM

ADDED : ஜூலை 25, 2026 06:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2026 06:42 PM ADDED : ஜூலை 25, 2026 06:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூலை 26

கோயில் * ஆடி பிரம்மோற்ஸவம் - 6ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், தங்கப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளல், காலை 8:00 மணி, மோகினி அவதாரம், யானை வாகனத்தில் எழுந்தருளல், மாலை 6:15 மணி, கலை நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.

* ஆடி உற்ஸவம் - முகூர்த்தக்கால் நடுதல்: சமயபுரம் மாரியம்மன் கோயில், 3வது செக்டர், மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு, மதுரை, காலை 7:45 மணிக்கு மேல் 8:45 மணிக்குள்.

* ஆடி உற்ஸவம்: சந்தனமாரியம்மன் கோயில், சந்தனம் நகர், கண்ணனேந்தல், கலைவாணி கலைக்குழுவின் கும்மிப்பாட்டு, இரவு 8:00 மணி.

* பிரதோஷம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, வேதநாயகி அம்மாள், திருமறை நாதருக்கு கூட்டு பாராயணம், சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணி.

* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

* பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி, சிவனுக்கு அபிஷேகம், ஆராதனை: காட்டு பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, மாலை 4:30 மணி.

பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்சனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள் விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.

* குருவின் மேன்மை: நிகழ்த்துபவர் - பிரேமகுமாரி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* அன்னை சாரதாதேவி: நிகழ்த்துபவர் - சுவாமி தயாசாகரானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

* பாகவதசப்தாகம்: நிகழ்த்துவோர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

பொது * மாவட்ட பொதுக்குழு கூட்டம்: பிராமண கல்யாண மஹால், பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் பக்தவத்சலம், முன்னிலை: தென்மண்டலத் தலைவர் இல. அமுதன், சிறப்பு விருந்தினர்: மாநில தலைவர் கணேசன், விஸ்வாஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் சங்கர சீதாராமன், ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், காலை 11:00 மணி.

* வரலாற்று வானத்தில் வலம் வரும் தமிழ் - சிந்தனை கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், முன்னிலை: புரட்சிக் கவிஞர் மன்றம் தலைவர் வரதராஜன், ஆதிசிவம், ஏற்பாடு: மாமதுரை கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.

* சவுராஷ்டிரா மெடிக்கல் அசோசியேஷன் தொடக்க விழா, எம்.எல்.ஏ., கோபிசனுக்கு பாராட்டு விழா, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் படித்து பட்டம் பெற்ற டாக்டர்களுக்கு பாராட்டு விழா, நீட், பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை கவுரவிக்கும் விழா: தனுஜா கோடீஸ்வரன் விசேஷா ஹால், சி.எம்.ஆர்., ரோடு, பாலரெங்காபுரம், மதுரை, முன்னிலை: சவுராஷ்டிர அரசியல் நடவடிக்கை குழு தலைவர் கிஷோர் குமார், டாக்டர்கள் குப்புசாமி, ரத்னகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.சரவணன், ஓய்வுபெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரி ராஜ்குமார், மாலை 6:10 மணி.

* பொதுக்குழு கூட்டம், திருமண தகவல் பரிமாற்ற விழா: சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்குமாசி வீதி, மதுரை, முன்னிலை: தலைவர் ஆறுமுகவேலு, செயலாளர் ஆறுமுகம், ஏற்பாடு: திருநெல்வேலி சைவ வேளாளர் சங்கம், காலை 10:00 மணி.

* அருள் முத்துக்குமரன் எழுதிய 'உள் ஒதுக்கீட்டில் ஒளிந்திருக்கும் சமூக அநீதி' நுால் வெளியீட்டு விழா: ராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி, மதுரை, தலைமை: தமிழ்முரசு, வெளியிடுபவர்: மக்கள் தேசம் கட்சி தலைவர் ஆசைதம்பி, பெறுபவர்: பேராசிரியர் கதிரவன், ஏற்பாடு: வணங்காமுடி பதிப்பகம், பண்டிதர் பதிப்பகம், அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம், காலை 10:00 மணி.

* 2025, 2026ல் நடத்திய புறா போட்டிகளில் வென்ற புறா உரிமையாளர்களுக்கு பரிசளிப்பு விழா: கே.பி.ஆர்., மஹால், ஹார்வி நகர் 2வது தெரு, அரசரடி, மதுரை, தலைமை: சென்னை ஏ.எம்.எச்.சி., தன்சிங், ஏற்பாடு: மதுரை மாவட்ட ஹோமிங் பீஜியன் சொசைட்டி, காலை 10:30 மணி.

* 6 முதல் 16 வயது குழந்தைகளுக்கான இலவச மிருதங்கம், ஹார்மோனியம் வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை.

* காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நோட்புக் பரிசளிப்பு விழா: காமராஜர் திடல், கரும்பாலை, மதுரை, தலைமை: தலைவர் மைக்கேல்ராஜ், சிறப்புரை: த.மா.கா., பொதுச் செயலாளர் மலைச்சாமி, வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவர் முத்துக்குமார், டாக்டர் பிரியதர்ஷினி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வில்லவன் கோதை, ஏற்பாடு: கரும்பாலை நாடார் உறவின்முறை, இளைஞர் பேரவை, மகளிரணி, மாலை 6:00 மணி.

* ஆலமரத்திற்கு 107வது பிறந்தநாள் விழா, இயற்கை பசுமை திருவிழா: ஆலமரத்திடல், மீனாம்பாள்புரம், மதுரை, தலைமை: நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் நிறுவனர் அபுபக்கர், சிறப்பு விருந்தினர்கள்: எம்.எல்.ஏ., கல்லாணை, முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன், மாலை 4:00 மணி.

* எண்ணம் உயர...வாழ்க்கை மலர - குழந்தைகளுக்கான நிகழ்ச்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: உலக சாதனை நல்லாசிரியர் சுலைகா பானு, ஏற்பாடு: பொது நுாலக இயக்ககம், காலை 11:00 மணி.

மருத்துவம் * உலக மூளை தினத்தை முன்னிட்டு சிறப்பு இலவச பரிசோதனை முகாம்: பாரதி இன்பினிட்டி மருத்துவமனை, இலந்தைகுளம், மதுரை, காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.

* முதுகு தண்டுவட மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் அஸ்வின் தீபக் ராஜன், மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை.

கண்காட்சி * மடீட்சியாவின் பிரின்ட் அண்ட் பேக் தொழில் கண்காட்சி: ஐடா ஸ்கட்டர், ரிங் ரோடு, மதுரை, ஏற்பாடு: மடீட்சியா, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை, மாணவர்கள் பார்வையிடும் நேரம்: மதியம் 1:00 முதல் 3:00 மணி வரை.

* அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us