ADDED : ஜூலை 25, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
மேலுார்: வண்ணாம்பாறைபட்டியில் மந்தை கருப்பணசாமி கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இரு தரப்பினரிடையே வரி வசூலிப்பது மற்றும் மைக் செட் போடுவது குறித்து பிரச்னை ஏற்பட்டது.
இருதரப்பினரும் பஸ் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் போலீசார் சமாதானப்படுத்தினர். மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பிரேம்கிஷோர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. இதில் கோயிலில் சுவாமி கும்பிடலாம், கும்மி கொட்டவும், கலை நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது. ஒரு தரப்பினர் தனியாக கோயில் கட்டி சுவாமி கும்பிடுவது என முடிவு செய்யப்பட்டது.
