ADDED : பிப் 13, 2024 04:25 AM
கோயில்
மாசி மகம் தெப்பத்திருவிழா: கூடலழகர் கோயில், மேலவடம்போக்கித் தெரு, மதுரை, விஷ்வக்சேனர் புறப்பாடு, மிருத்சங்கிரணம், அங்குரார்ப்பணம், இரவு 7:00 மணி.
காஞ்சி மகா பெரியவர் சன்னியா தீட்சை பெற்ற தின சிறப்பு நிகழ்ச்சி: 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மகா பெரியவா விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு புஷ்பாஞ்சலி பூஜை, தீபாராதனை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவிளையாடற் புராணம்: நிகழ்த்துபவர் -- மு.முருகேசன், வடக்காடிவீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
கீதா ஞான யக்ஞம்: நிகழ்த்துபவர் - சுவாமி சுரேஷானந்தா: கீதா பவனம், சீதா ஹால், 3, அமெரிக்க மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி
பொது
சித்த, ஆயுர்வேத, ஓமியோபதி, யோகா மருத்துவ முகாம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை, பங்கேற்பு: நீதிபதி கிருஷ்ணகுமார், சித்த மருத்துவ அலுவலர் சுப்ரமணியன், ஏற்பாடு: மகா வழக்கறிஞர்கள் சங்கம், காலை 10:00 மணி.
உன்னத பாரத் அபியான் திட்டத்தை வலியுறுத்தும் நடைபயணம்: ஒய்.புதுப்பட்டி, பங்கேற்பு: ஊராட்சித் தலைவர் இந்திரா, ஏற்பாடு: மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, காலை 9:00 மணி.
வார்டுகளின் குறைதீர் கூட்டம்: மாநகராட்சி (தெற்கு) மண்டலம் 4 அலுவலகம், முனிச்சாலை, மதுரை, பங்கேற்பு: மேயர் இந்திராணி பொன்வசந்த், காலை 9:00 மணி.
உற்பத்தித் திறன் வார கொண்டாட்டம்: தொழில் அதிபர்கள் சங்க அலுவலகம், கப்பலுார், பங்கேற்பு: மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கணேசன், தொழிற்சாலை பாதுகாப்பு இணை இயக்குநர் வேலுமணி, காலை 10:00 - மதியம் 1:00 மணி வரை.
பொதுக்குழுக் கூட்டம்: மூட்டா அலுவலகம், காக்கா தோப்பு தெரு, மதுரை, பங்கேற்பு: பேராசிரியர் ராமமூர்த்தி, ஏற்பாடு: தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம், மதுரை கிளை, காலை 10:30 மணி.
ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரதம்: கலெக்டர் அலுவலகம் எதிரே, மதுரை, காலை 10:00 மணி, தலைமை: மாவட்ட தலைவர் கோபி, பங்கேற்பு: மாநில தலைவர் முருகையன், ஏற்பாடு: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், மதுரை, காலை 10:00 மணி முதல்.
பள்ளி, கல்லுாரி
எஸ்.பி.எஸ்.எஸ்.ஐ வைத்து தரவுகள் பகுப்பாய்வு குறித்த தேசிய கருத்தரங்கு: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முன்னாள் செயலாளர் நவநீதகிருஷ்ணன், செயலாளர் கண்ணன், ஏற்பாடு: முதுகலை விலங்கியல் மற்றும் ஆராய்ச்சித்துறை, காலை 10:00 மணி.
கண்காட்சி
ராஜஸ்தான் கிராப்ட் மேளா: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 - இரவு 9:00 மணி வரை.