ADDED : செப் 08, 2024 04:43 AM
கோயில்
ஆவணி மூலத் திருவிழா 4ம் நாள் தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை: மீனாட்சி அம்மன் கோயில், ஆவணிமூல வீதி சுற்றி கோயிலுக்குள் வந்து மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் தங்கல், சித்திரை வீதி, கீழபட்டமார் தெரு வழியாக வடக்கு ஆவணி மூலவீதி ராமசாமி பிள்ளை மண்டபம் வரை தங்கச்சப்பரத்தில் சுவாமி, அம்மன் புறப்பாடு, காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, கீழ ஆவணி மூல வீதி வழியாக சுவாமியும் அம்மனும் யானை வாகனத்தில் கோயிலுக்கு வந்து சேருதல், இரவு 8:00 மணி.
கும்பாபிஷேகம்:- மாரியம்மன், சித்த விநாயகர் கோயில், கோரிப்பாளையம், மதுரை, காலை 10:30 மணி, சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காலை 10:00 மணி.
கும்பாபிஷேகம்: பெரியநாச்சி, ஏமக்கருப்பு கோயில், நா.கோயில்பட்டி, காலை 10:00 மணி.
திரிவேணி விழா: குருதேவர் சுவாமி சிவானந்தரின் அவதார தினம்: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, திருப்பள்ளியெழுச்சி, சிவனாந்த சுப்ரபாதம், சிவானந்தரின் புனித வெள்ளிப் பாதுகைகளுக்கு சிறப்பு வழிபாடு, பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு நிறைவு விழா, காலை 7:00 மணி, நாட்டியாஞ்சலி - -பாலாநந்தகுமார் குழு, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி, தொடக்கவுரை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மாலை 6:00 மணி.
விநாயகர் சதுர்த்தி விழா: ஆனந்த விநாயகர் கோயில், எச்.எம்.எஸ்., காலனி, ஆனந்த நகர், மதுரை, விளக்கு பூஜை, ஏற்பாடு: கோயில் டிரஸ்ட், ஆனந்த நகர், அமிர்தா நகர் குடியிருப்போர் நலச்சங்கம், காலை 10:00 மணி.
சர்ச் பெருவிழா: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணா நகர், மதுரை, திருப்பலி - - பாதிரியார் எட்வின் சகாயராஜா, காலை 7:30 மணி, பாதிரியார் ஆரோன், காலை 9:30 மணி, ஆயர் லுார்து ஆனந்தம், காலை 11:00 மணி, திருவிழா திருப்பலி, பேராயர் அந்தோணி பாப்புசாமி, மாலை 6:00 மணி.
கிறிஸ்துவின் சபை ஞாயிறு ஆராதனை: விசுவாசபுரி, ஞானஒளிபுரம், மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
வள்ளுவரும் காந்தியடிகளும்: நிகழ்த்துபவர் -- சபீரா பீவி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பொது
தெலுங்கு பிராமண மகா சபா பொதுக்குழுக்கூட்டம்: அபிநவ வித்யா தீர்த்த சபா மண்டபம், சிருங்கேரி நகர், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.
தபால் தலை நாணயங்கள் சேகரிப்போர் மாதாந்திர சங்கக் கூட்டம்: சவுராஷ்டிரா உயர்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: தலைவர் சுவாமியப்பன், பங்கேற்பு: உறுப்பினர் சிவசுப்பிரமணியம், ஏற்பாடு: செயலாளர் சண்முகலால், காலை 10:30 மணி.
விபத்தில் இறந்த ம.தி.மு.க., நிர்வாகிகள் மூவரின் குடும்பத்தினருக்கு புகழஞ்சலி மற்றும் நிதி வழங்கும் நிகழ்ச்சி: ஆறுநாடு அரங்கம், பழைய குயவர் பாளையம் ரோடு, மதுரை, தலைமை: எம்.எல்.ஏ., பூமிநாதன், பங்கேற்பு: முதன்மை செயலாளர் துரை, எம்.பி., மதியம் 3:00 மணி.
குருதேவ் சுவாமி சிவானந்தா பிறந்தநாள் விழா: ஹரிஓம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், சிம்மக்கல், மதுரை, சங்கீர்த்தனம்: ராணி லேடி மெய்யம்மாள் ஆச்சி தமிழ் இசைக் கல்லுாரி பேராசிரியர் ரம்யா, ஏற்பாடு: ஆனந்த குடீர் பவுண்டேஷன், காலை 9:45 மணி.
ஹிந்து மக்கள் கட்சி நடத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: மொட்டைபிள்ளையார் கோயில், கீழமாசிவீதி, மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் சோலைகண்ணன், முன்னிலை: அமைப்பாளர் குபேரராஜ்குமார், துவக்கி வைப்பவர்: நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் குருசாமி, மாலை 4:00 மணி.
ஆசிரியர் தின விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: பொருளாளர் செந்தில்குமார், முன்னிலை: செயலாளர் நந்தாராவ், பங்கேற்பு: முதல்வர் தேவதாஸ், மதியம் 12:00 மணி.
மெடி லேப் டேக்கான் -அறிவியல் மாநாடு மற்றும் கண்காட்சி: மதுரை மருத்துவ கல்லுாரி, ஏற்பாடு: மெடிக்கல் லேபேரட்டரி டெக்னாலஜிஸ்ட் அமைப்பு, காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.
கண்காட்சி
புத்தகத் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, மாலை 4:00 மணி, தலைமை: போலீஸ் கமிஷனர் லோகநாதன், ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்கம், பபாசி, மாலை 6:00 மணி.
வண்ண மீன்கள் கண்காட்சி, வீட்டு உபயோகப் பொருட்காட்சி: காந்தி மியூசிய மைதானம், மதுரை, காலை 11:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை.