ADDED : பிப் 17, 2024 05:17 AM
கோயில்
மாசி மகம் திருவிழா - 3ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, கைலாய பர்வதம், காமதேனு வாகனங்களில் அம்மனும், சுவாமியும் வீதி உலா, காலை 10:00 மணி, மாலை 6:00 மணி.
மாசி மகம் தெப்பத்திருவிழா - 4ம் திருவிழா: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, கள்ளர் அலங்காரத்தில் பல்லக்கில் தெற்காவணி மூலவீதி ராமசாமி செட்டியார் மண்டகப்படியில் எழுந்தருளுதல்,காலை 11:00 மணி, மோகினி அலங்காரத்தில் பத்தி உலா, மாலை 6:00 மணி, கருடவாகனம், இரவு 7:00 மணி.
மாசிப்பெருந்திருவிழா 3ம் நாள்: இம்மையில் நன்மை தருவார் கோயில், மதுரை, சுவாமி வீதி உலா, மாசி வீதி, காலை 10:00 மணி.
விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்: சிருங்கேரி சங்கரமடம், 88, அம்மன் சன்னதி தெரு, பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.
பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற ஸ்ரீ ஹயக்ரீவர், தட்சிணாமூர்த்தி ேஹாமம், அன்னதானம்: கோதண்டராமர் கோயில் அருகில், பழங்காநத்தம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமண சமாஜம், வீரவாஞ்சிநாதன் கிளை, காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
பக்தி சொற்பொழிவு
பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி சுரேஷானந்தா, கீதா பவனம், கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி
தேசிய உற்பத்தி திறன் வாரம் நிறைவு விழா: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஜே.சி.ஐ., முன்னாள் தலைவர் கார்த்திகேயன், அமெரிக்கன்கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், ஏற்பாடு: மதுரை உற்பத்தி திறன் குழு, காலை 11:00 மணி.
சி.எஸ். ராமசாரி நினைவு நர்சரி, பிரைமரி பள்ளி 16ம் ஆண்டு விழா: பள்ளி வளாகம், திருநகர், மதுரை, தலைமை: துணைத் தலைவர் கமலம் ராஜேந்திரன், பங்கேற்பு: தாளாளர் வெங்கடேஷ், இயக்குநர் பூர்ணிமா, மாலை 4:30 மணி.
பட்டமளிப்பு விழா: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், பங்கேற்பு: செயலாளர் சுவாமி வேதாந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்தா, முதல்வர் வெங்கடேசன், சிறப்பு விருந்தினர்: அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி, காலை 11:00 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம் துவக்கம்:விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி, காலை 9:00 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம்: உச்சப்பட்டி, காந்தி நகர், பெரிதினும் பெரிது கேள் - சொற்பொழிவு: பேசுபவர் - தியாகராஜர் கல்லுாரி உதவி பேராசிரியர் மோகனா, ஏற்பாடு: மன்னர் திருமலை நாயக்கர்கல்லுாரி, காலை 10:00 மணி.
டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதற்கானபயிற்சி முகாம் பயிற்சி: லதா மாதவன் கலை அறிவியல் கல்லுாரி, கிடாரிப்பட்டி, பயிற்சி அளிப்பவர்: தாசில்தார் பாலாஜி, காலை 10:00 மணி.
1970-74ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் சந்திப்பு: வேளாண் கல்லுாரி, ஒத்தக்கடை, தலைமை: முதல்வர் மகேந்திரன், பங்கேற்பு: பேராசிரியர் சுப்பிரமணியன், சாமியப்பன், காலை 10:00 மணி.
2047ல் வளர்ந்த இந்தியா குறித்து சிறப்புரை: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, பேசுபவர்: கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலை பேராசிரியர் அருணாசலம், ஏற்பாடு:பொருளாதாரத்துறை, காலை 10:00 மணி.
பொது
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - தி.மு.க., பொதுக்கூட்டம்: அண்ணாநகர் அம்பிகா தியேட்டர்,மதுரை, தலைமை: தளபதி எம்.எல்.ஏ., பங்கேற்பு: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், ராஜா எம்.பி., இரவு 7:00 மணி.
மதுரை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, பங்கேற்பு: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், ஏற்பாடு: கலை பண்பாட்டுத்துறை, மாலை 6:00 மணி.
புலவர் ஆறுமுகம் எழுதிய சூரியச்சில்லுகள் - நுால் திறனாய்வு: அல்அமீன் பள்ளி, புதுார், மதுரை, மதிப்புரையாளர் - கவிஞர் மூரா, ஏற்பாடு: மதுரை வாசகர் வட்டம், காலை 10:30 மணி.
கருணாநிதி நுாற்றாண்டு புகைப்பட கண்காட்சி, கலந்துரையாடல்: துவாரகா பேலஸ், பாண்டி கோயில் அருகில், மதுரை, ஏற்பாடு: தி.மு.க., இலக்கிய அணி, காலை 9:00மணி முதல்.
ரெப்கோ ேஹாம் பைனான்ஸ் லிட்., சிறப்பு வீட்டு கடன் முகாம்: ஜி.எம். காம்பளக்ஸ், வடக்கு வெளிவீதி, அமெரிக்கன் கல்லுாரி எதிரில், திருமங்கலம் என்.ஆர்., காம்பளக்ஸ் கிளைகள், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
ராகப்ரியா இசை நிகழ்ச்சி: பார்ச்சூன்பாண்டியன் ஓட்டல், மதுரை, பாட்டு - மாளவிகா சுந்தர், வயலின் - வைபவ் ரமணி, மிருதங்கம் - குரு ராகவேந்திரா, மோர்சிங் - சாய் சுப்பிரமணியன், மாலை 5:30 மணி.
தென்தமிழக சுற்றுலா முகவர்கள் சங்கம் ஆண்டு விழா: ஆகாஷ் கிளப், விளாங்குடி, தலைமை: தலைவர் ரவிச்சந்திரன், சிறப்பு விருந்தினர்: மலேசியா ைஹகமிஷனர் சரவணகுமார், காலை 9:00 மணி.
கண்காட்சி
ராஜஸ்தான் கிராப்ட் மேளா - ஆடைகள், ஐம்பொன் நகைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.