sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள் /மார்ச் 7க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சிகள் /மார்ச் 7க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் /மார்ச் 7க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் /மார்ச் 7க்குரியது


ADDED : மார் 07, 2025 06:54 AM

Google News

ADDED : மார் 07, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மாசி மண்டல உற்ஸவம் -5ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மனும், சுவாமியும் மரச் சப்பரத்தில் சித்திரை வீதிகள் புறப்பாடு, காலை 7:00 மணி, அம்மனும் சுவாமியும் தங்க குதிரை வாகனத்தில் சித்திரை வீதிகள் புறப்பாடு, இரவு 7:00 மணி.

பங்குனிப் பெருவிழா -முதல் நாள்: சுப்பிரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தங்கப்பல்லக்கில் வீதி உலா, காலை 10:00 மணி, தங்ககுதிரை வாகனத்தில் வீதி உலா, இரவு 7:00 மணி.

மாசி மகம் தெப்பத்திருவிழா -6ம் நாள்: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, ஏகாந்த சேவை மாடவீதி புறப்பாடு, காலை 9:00 மணி, யானை வாகனத்தில் மாடவீதி புறப்பாடு, இரவு 7:00 மணி, ஆண்டாள் சன்னதியில் பெருமாளும், ஆண்டாளும் மாலை மாற்றுதல், இரவு 8:00 மணி.

மாசி பெருந்திருவிழா- 5ம் உற்ஸவ தினம்: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, நேதாஜி ரோடு, மேலமாசி வீதியில் சுவாமி வீதி உலா, காலை 9:00 மணி.

சிருஷ்டி ஞான விண்ணப்பம்: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், 10, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:15 மணி.

புன்னகை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், 2, யூனியன் பேங்க் காலனி, 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி.

மாசித் திருவிழா கொடியேற்றம்: வல்லடிகாரர் கோயில், அம்பலகாரன்பட்டி, மதியம் 11:00 மணி.

மாசித் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம்: முத்தாளம்மன் கோயில், சேக்கிபட்டி, காலை 11:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருக்குறள்: நிகழ்த்துபவர் - - பெரியகருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

சத்சங்கம், லலிதா சகஸ்ரநாமம், கீதா பாராயணம்: நிகழ்த்துபவர்கள் -- கீதாலயா பாராயணக்குழு, தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்த, மாலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி

7ம் ஆண்டு விழா: எவர்கிரீன் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.சி., பள்ளி, முத்துப்பட்டி, சிறப்பு விருந்தினர்: ஸ்டாண்ட் ஆப் காமெடி மதுரை முத்து, பங்கேற்பு: தாளாளர் திருமுருகன், மாலை 4:30 மணி.

76ம் ஆண்டு விளையாட்டு விழா: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பாண்டியராஜா, சிறப்பு விருந்தினர்: சர்வதேச பாட்மின்டன் விளையாட்டு வீரர் யுவ தயாளன், பங்கேற்பு: உடற்கல்வித் துறை இயக்குனர் செல்வகுமார், காலை 9:00 மணி.

என்.சி.சி., முகாம் நிறைவு விழா: கொடி மங்கலம், கூளப்பாண்டி, ஊமச்சிக்குளம், திருமால்புரம், கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்தல், தலைமை: முதல்வர் ராஜூ, பங்கேற்பு: மதுரை காமராஜ் பல்கலை என்.சி.சி., திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி, கல்லுாரி முன்னாள் செயலாளர் கண்ணன், காலை 11:00 மணி, மாணவர்களும் சமூகப்பணியும், பேசுபவர் -- பேராசிரியர் ராஜ்குமார், ஏற்பாடு: யாதவர் கல்லுாரி, மாலை 6:00 மணி.

சிறுதானியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அரசு பெண்கள் பள்ளி, செக்கானுாரணி, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, ஏற்பாடு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி வணிகவியல், தகவல்தொழில்நுட்பத் துறை, காலை 10:00 மணி.

24ம் ஆண்டு விழா: ஸ்ரீ வைரவர் மெட்ரிக் பள்ளி, மதுரை, சிறப்பு விருந்தினர்: கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம், பங்கேற்பு: சோனா நிதி நிறுவன இயக்குனர் பழனியப்பன், மாலை 4:00 மணி.

கலை இலக்கிய விழா: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், பங்கேற்பு: பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான பறை இசைக் கலைஞர் வேலு, ஏற்பாடு: தமிழ் உயராய்வு மையம், காலை 9:00 மணி.

மகளிர் தின விழா

மின்வாரிய அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை, காலை 11:00 மணி.

சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ஸ்ரீனிவாசன், சிறப்பு விருந்தினர்: ரயில்வே டி.எஸ்.பி., காமாட்சி, பங்கேற்பு: செயலாளர் குமரேஷ், காலை 9:30 மணி.

அமெரிக்கன் கல்லுாரி, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், விருது பெறுபவர்கள் -- தமிழ்நாடு இறையியல் கல்லுாரி முதல்வர் மார்க்கரெட் கலைச்செல்வி, தாஜ் மருத்துவமனை இயக்குனர் சுதா தீப், எழுத்தாளர் அனுஜா சந்திரமவுலி, அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர் செல்வராணி, காலை 10:00 மணி.

பொது

முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், காலை 10:00 மணி.

போலீசாருக்கான குறைதீர் கூட்டம்: ஆயுதப்படை மைதானம், மரக்கன்று நடும்விழா, போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா, கமிஷனர் அலுவலகம், மதுரை, தலைமை: டி.ஜி.பி., சங்கர் ஜிவால், காலை 8:30 மணி.

விளையாட்டு

5வது மாநில அளவிலான கல்லுாரி அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள்: லேடி டோக் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை 2டிஎன் நாவல் யூனிட் என்.சி.சி., அதிகாரி கேப்டன் பிரதீப் பிரேம்குமார், பங்கேற்பு: முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, விளையாட்டு மேம்பாட்டு துறை மாநில துணைச் செயலாளர் சுரேஷ் மனோகரன், மாலை 4:00 மணி.

18 வயதுக்குட்பட்டோருக்கான டென்னிஸ் போட்டி: மதுரைக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: டி.வி.எஸ்., மொபிலிட்டி, காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.

மருத்துவம்

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை: சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, பங்கேற்பு: டாக்டர்கள் இயக்குநர் சுனிதா, நிர்வாக இயக்குநர் பிரபாகரன், காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

கண்காட்சி

மீனாட்சி பேன் ஹவுசின் ஏ.சி., கண்காட்சி, விற்பனை: மதுரா கோட்ஸ் மில் அருகில், நியூ ஜெயில் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

பட்டு, பனாரஸ், காட்டன் சேலைகள், வேட்டிகள், சட்டைகள், மெத்தை விரிப்புகள், திரைச்சீலைகள் உள்ளிட்டவைகளின் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us