ADDED : ஏப் 16, 2025 04:19 AM
கோயில்
கும்பாபிஷேகம்: குருநாதசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 6:30 மணி முதல்.
சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம்: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்பு வீதி, மேட்டுத்தெரு, பெத்தானியாபுரம், மதுரை, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம், தீபாராதனை, இரவு 7:45 மணி.
அகண்டநாமம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
அனுஷ உற்ஸவம், மகா பெரியவர் விக்ரகத்திற்கு அபிேஷகம், அலங்காரம், வெள்ளி பாதுகைக்கு சிறப்பு பூஜை, மாலை 5:00 மணி, குருவருளும் திருவருளும் என்ற தலைப்பில் சொற்பொழிவு, சண்முக திருக்குமரன், மாலை 6:30 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.
அனுஷ உற்ஸவம், காஞ்சி மடம் முள்ளிப்பள்ளம் கிளை, சோழவந்தான், மாலை 6:00 மணி.
பூச்சொரிதல் விழா: தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.
அனுஷ உற்ஸவம், குரு வந்தனம், வேத பாராயணம், மகா பெரியவருக்கு பூஜை, தீபாராதனை, மலையாளம் கிருஷ்ணய்யர் வேத பாடசாலை, ஒற்றை அக்ரஹாரம், சோழவந்தான், மாலை 4:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா: நிகழ்த்துபவர் - -- விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி கல்லுாரி
முப்பெரும் விழா - 68ம் ஆண்டு கல்லுாரி, விளையாட்டு, நாட்டு நலப்பணித் திட்ட நிறைவு விழா: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் லட்சுமி, சிறப்பு விருந்தினர்: தியாகராஜர் கல்லுாரி முதல்வர் பாண்டியராஜா, காலை 10:00 மணி.
ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பாராட்டு விழா, 8ம் வகுப்பு மாணவர்கள் பிரிவு உபசார விழா: மனோகரா நடுநிலைப் பள்ளி, செல்லுார், மதுரை, சிறப்பு விருந்தினர்: துணை மேயர் நாகராஜன், ஏற்பாடு: குறிஞ்சி மலர் அரிமா சங்கம், மாலை 5:00 மணி.
56 வது கல்லூரி நாள்விழா, விளையாட்டு நாள் விழா, யாதவர் கல்லுாரி, காலை 10:00 மணி.
பொது
முருக பக்தர்கள் மாநாடு ஆலோசனைக் கூட்டம்: ஆர்.ஆர்.மகால், பாண்டி கோயில், மதுரை, தலைமை: பா.ஜ., நகர் தலைவர் மாரிச்சக்கரவர்த்தி, ஏற்பாடு: ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம், மாலை 4:30 மணி.பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தகோரி ஆர்ப்பாட்டம்: தேவர் திடல், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, மதுரை, தலைமை: மாவட்டத் தலைவர் சோணைசாமி, ஏற்பாடு: ஹிந்து மகா சபா பூசாரி பேரவை, மாலை 6:00 மணி.
மருத்துவம்
மூட்டுவலி சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை.