ADDED : ஏப் 23, 2025 04:08 AM
கோயில்
பூச்சொரிதல் விழா: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, அம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, தெப்பக்குளம் சுற்றி வருதல், அபிஷேகம், இரவு 7:25 மணி.
பக்தி சொற்பொழிவு
பகவான் ரமணர்: நிகழ்த்துபவர் -- ராம்பிரசாத், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.
108 திவ்யதேச வைபவம்: நிகழ்த்துபவர் -- அரவிந்தலோசனன், மதனகோபால சுவாமி கோயில், மதுரை, மாலை 6:30 மணி.
திருநாவுக்கரசர் குருபூஜை - திருநாவுக்கரசர் எனும் திருநாமம்: நிகழ்த்துபவர் -- திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் துணை அமைப்பாளர் சிவதனுஷ், இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், மாலை 6:00 மணி.
திருவருட்பா: நிகழ்த்துபவர் -- விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
பொது
பணி மேம்பாட்டு ஊதியம், நிலுவைத் தொகையினை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, ஏற்பாடு: மூட்டா, மாலை 5:00 மணி.
அமைதி நிறைய பேசும் --நுால் வெளியீட்டு விழா: உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை, மதுரை, தலைமை: அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன், பங்கேற்பு: நீதிபதிகள் சுவாமிநாதன், விஜயகுமார், எழுத்தாளர் முகம்மது முகைதீன், மாலை 5:00 மணி.
உலக மரபு விழாவை முன்னிட்டு கிராமிய கலை நிகழ்ச்சிகள்: திருமலை நாயக்கர் மகால், மதுரை, ஏற்பாடு: தொல்லியல்துறை, காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.
உலக புத்தக நாள், திருக்குறள் உரையரங்கம்: அண்ணா பூங்கா, திருநகர், மதுரை, தலைமை: இணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, சிறப்பு விருந்தினர்: செந்தமிழ்க் கல்லுாரி பேராசிரியர் அதிவீரபாண்டியன், ஏற்பாடு: திருநகர் மக்கள் மன்றம், காலை 8:00 மணி.
விளையாட்டு
மருத்துவ கல்லுாரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான போட்டிகள் துவக்கம் -- ஹாக்கி போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை மற்றும் வாலிபால், கூடைப்பந்து, எறிபந்து போட்டிகள், அரசு மருத்துவக் கல்லுாரி, மதுரை, காலை 8:00 மணி முதல்.
கண்காட்சி
தொழில்வர்த்தக பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, துவக்கி வைப்பவர்: மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமை: தலைவர் ஜெகதீசன், பங்கேற்பு: கண்காட்சி தலைவர் வரதராஜன், ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
உலக புத்தக தின கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 79, மேலக்கோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

