கோயில்
எண்ணெய் காப்பு உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, பொன்னுாஞ்சல் மண்டபத்தில் இருந்து சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் சிம்மாசனத்திலும் ஆடி வீதியில் உலா, இரவு 7:00 மணி.
திருவாதிரை திருவிழா: சுப்பிர மணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், கோயில் மகா மண்டபத்தில் மூலவர்கள் நடராஜர், சிவகாமிக்கு தைலக்காப்பு, பூச்சப்பரத்தில் கிரிவலம், அதிகாலை 6:00 மணி.
விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.
திருஅத்யயன உற்ஸவம் - ராப்பத்து, நம்மாழ்வார் மங்களாசாசனம், திருவாய்மொழி தொடக்கம்: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், மதுரை, இரவு 7:00 மணி.
திரு அத்யயன உற்ஸவம் - ராப்பத்து: கள்ளழகர் கோயில், அழகர் கோவில், மாலை 5:00 மணி.
திருஅத்யயன உற்ஸவம் - ராப்பத்து: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 5:00 மணி.
ஆருத்ரா தரிசனம், நடராஜப்பெருமான், சிவகாமி அம்மன் திருவீதி உலா: சன்மார்க்க மத்திய சேவா சங்கம், 106, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, காலை 10:00 மணி, சிவபெருமான் குதிரைவாகனத்தில் பவனி வருதல், ஏற்பாடு: ராஜமாணிக்கம் பரம்பரை தர்மகர்த்தா, இரவு 7:30 மணி.
ஆருத்ரா தரிசனம், அபிஷேகம், திருவெம்பாவை பாராயணம்: பகற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே., நகர் மதுரை, காலை 5:00 மணி.
ஆருத்ரா தரிசனம்: நடராஜர் கோயில், அனுப்பானடி, சிவபெருமான் திருவீதி உலா, காலை 10:30 மணி, சுவாமி திருவீதி உலா, இரவு 7:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00 மணி.
சத்சங்கம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.
சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: சந்திரகாந்தன், முன்னிலை: லுாலா, காலை 6:00 மணி.
விஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 6:00 மணி, ஏற்பாடு: ஸ்ரீஹரி பக்த சமாஜம், திருப்பாவை: நிகழ்த்துபவர் -ஆசிரியை சுஜாதா, மாலை 6:00 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் - பேராசிரியர் ஜகந்நாத் ராமானுஜதாஸர், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை காலை 6:30 மணி.
நாம ஸங்கீர்த்தனம் பாரயணம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி.
பள்ளி, கல்லுாரி
பொங்கல் கொண்டாட்டம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் சுந்தர், பங்கேற்பு: முதல்வர் ராமமூர்த்தி, ஏற்பாடு: கல்லுாரி மக்கள் தொடர்பு இயக்கம், காலை 8:30 மணி.
பொது
மக்கள் குறைதீர் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி.
பொங்கல் கொண்டாட்டம்: யாதவர் பண்பாட்டுக் கழகம், 120 அடி ரோடு, மின்நகர், மதுரை, பங்கேற்பு: செயலாளர் கபிலன், பொருளாளர் முத்துராக்கு, தலைவர் கண்ணன், காலை 10:00 மணி.
வைகை நதிக்கு பவுர்ணமி தீபாராதனை: பேச்சியம்மன் படித்துறை, மதுரை, ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், மாலை 5:20 மணி.
காலண்டர் வெளியீட்டு விழா: யாதவ மகாசபை, வடக்குமாசி வீதி, கிருஷ்ணன் கோவில், மதுரை, தலைமை: தலைவர் ஜெயக்குமார், பங்கேற்பு: செயலாளர் செல்லையா, காலை 10:00 மணி.
'வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்' ஊழியர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி: பள்ளி வாசல், பார்க்டவுன், மதுரை, பங்கேற்பு மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் அலாவுதீன், காலை 8:00 மணி.
கண்காட்சி
காட்டன் பேப் - காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.