ADDED : பிப் 22, 2025 05:46 AM
கோயில்
மாசி மண்டல உற்ஸவம் --- பிரதான கொடியிறக்கி கணக்கு வாசித்தல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தரகண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
சுந்தர கலிவெண்பா: நிகழ்த்துபவர் - - சுகுமாரி, திருவள்ளுவர்மன்றம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 5:00 மணி.
விவேக சூடாமணி: நிகழ்த்துபவர்-- சுவாமி நித்ய சத்வானந்தா,வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி, ரிஷிகேஷ் பயண சிறப்பு வழிபாடு, காலை 11:30 மணி, தீபாராதனை, பிரசாதம், மதியம் 1:00 மணி.
சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- முரளி, ஜெய்மா நர்சரி பிரைமரி பள்ளி, அக்ரஹாரம், மன்னாடிமங்கலம், மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
12வது பட்டமளிப்பு விழா: அல்ட்ரா பொறியியல் கல்லுாரி, மேலுார் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: அல்ட்ரா கல்விக் குழு தலைவர் ஆறுமுகம், பங்கேற்பு: துணைத் தலைவர் பாபு தண்டபாணி, முதல்வர் ஸ்ரீனிவாசராமன், மாலை 5:00 மணி.
வேலைவாய்ப்பு முகாம்: மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி, பூவந்தி, பங்கேற்பு: தாளாளர் சிவராம், முதல்வர் விசுமதி, காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை.
விவேகானந்த நர்சரி, பிரைமரி பள்ளி 33ம் ஆண்டு விழா: ஆர்.எம்.எஸ்., மகால், மேலுார், பங்கேற்பு: தாளாளர் ராமச்சந்திரன், தலைமையாசிரியை ரேவதி, காலை 9:00 மணி.
தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியம் -கருத்தரங்கு: பாத்திமாகல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஓய்வு ஐ.ஜி., பிரபாகரன், ஏற்பாடு: வரலாற்று மற்றும் தமிழ் ஆராய்ச்சி துறை, காலை 9:30 மணி.
மன ஆரோக்கியமும், மாணவர்களை கையாளும் நுட்பமும்: லதா மாதவன் கல்லுாரி, கிடாரிபட்டி, தலைமை: இணைச் செயலாளர் ஜெகன் மாதவன், சிறப்பு விருந்தினர்: டாக்டர் செல்வி, காலை 10:30 மணி.
காந்திய சிந்தனையில் சான்றிதழ்,பட்டயபடிப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், பேசுபவர்: காந்தி மியூசியம் செயலாளர் நந்தாராவ், மதியம் 2:30 மணி.
தேசிய என்.எஸ்.எஸ். முகாம்: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை.
தமிழ்த்துறை மாணவர்களின் தகைசால் கூட்டம்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: பேராசிரியர் ராஜேஷ், காலை 10:00 மணி.
46ம் ஆண்டு பட்டமளிப்பு விழா: அரசு மீனாட்சி கலை அறிவியல் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, பட்டமளிப்பு உரை: மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் ( பொறுப்பு ) ராமகிருஷ்ணன், காலை 10:00 மணி.
பொது
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக நடக்கும் கலாசார விழா: லட்சுமிசுந்தரம் ஹால், மதுரை, ஏற்பாடு:மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மாலை 5:00 மணி.
தொழில் முனைவோருக்கு விருது வழங்கும் திருவிழா: ஐடா ஸ்கட்டர் மையம், ரிங் ரோடு, மதுரை, ஏற்பாடு: பி.எம்.சி., அமைப்பு, மாலை 4:00 மணி.
நமது காலத்தில் காந்தியை தேடுதல் - - நுால் மதிப்பாய்வுக்கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, பேசுபவர்: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், ஏற்பாடு: ஆராய்ச்சி பிரிவு, பங்கேற்பு: மியூசிய செயலாளர் நந்தாராவ், மாலை 5:00 மணி.
செயற்குழுக்கூட்டம்: யாதவர் பண்பாட்டு திருமண மண்டபம், சர்வேயர் காலனி, தலைமை: தலைவர் கண்ணன், பங்கேற்பு: செயலாளர் கபிலன், மாலை 6:00 மணி.
ஹிந்தி பேச்சு சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல் நகர், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.
ஜெய்ஹிந்த்புரம் வட்டாரக் களஞ்சியம் மகளிர் கூட்டமைப்பு 25ம் ஆண்டு விழா: ஏ.எஸ்., மகால், வில்லாபுரம், மதுரை, தலைமை: களஞ்சியம் பரஸ்பர இயக்க சின்ன பிள்ளை, சிறப்பு விருந்தினர்கள்: மாநகராட்சி கமிஷனர் சித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷோபனா, டாக்டர்கள் முத்துக்குமார், பாரதி, மதியம் 2:00 மணி.
இயற்கை நடைபயணம்: அழகர் கோவில் மலைப்பகுதி,தலைமை: கார்த்திகேயன், ஏற்பாடு: பசுமை மேலாண்மை திட்டம், அமெரிக்கன் கல்லுாரி, காலை 7:30 மணி.
கண்காட்சி
காட்டன், டிசைனர், பாரம்பரிய ஆடைகளுக்கான 'ராஜஸ்தான் சில்க் எக்ஸ்போ' விற்பனை, கண்காட்சி: விஜய் மகால், 44, கே.கே. நகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.
பாரம்பரிய உணவு கண்காட்சி, பரவலாக்க திட்டம்: தானம் அறக்கட்டளை அலுவலகம், வைத்தியநாதபுரம், டி.பி. ரோடு, மதுரை, தலைமை: நிர்வாக இயக்குனர் வாசிமலை, ஏற்பாடு:தானம் வளர்ச்சிக்கான சுற்றுலா மையம், சுகம் அறக்கட்டளை, காலை 10:00 மணி முதல்.

