ADDED : மார் 05, 2025 05:45 AM
கோயில்
மாசி மண்டல உற்ஸவம் -3ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மனும், சுவாமியும் மரச் சப்பரத்தில் கீழ, தெற்கு ஆவணி வீதிகளில் உலா வந்து கன்னிகா பரமேஸ்வரி மண்டபத்தில் எழுந்தருளல், காலை 7:00 மணி, அம்மன் காமதேனு வாகனத்திலும், சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும் மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி கோயில் சேருதல், இரவு 7:00 மணி.
மாசி மகம் தெப்பத்திருவிழா 3ம் நாள்: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, கள்ளர் திருக்கோலம் பல்லக்கு, தெற்காவணி மூல வீதிஉலா, காலை 11:00 மணி, மோகினி அலங்காரம், மாலை 6:00 மணி, கருடவாகனம், இரவு 7:00 மணி.
பங்குனிப் பெருவிழா - கொடியேற்றம்: சுப்பிரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 9:15 மணி முதல் 9:45 மணிக்குள்,சிம்மாசனத்தில் எழுந்தருளல், காலை 8:30 மணி, தங்கமயில் வாகனத்தில் வீதி உலா, இரவு 7:00 மணி.
மாசி பெருந்திருவிழா 2ம் உற்ஸவம்: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, நேதாஜி ரோடு, மேல மாசி வீதியில் சுவாமி வீதிஉலா, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா: நிகழ்த்துபவர் -- விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00மணி.
நாரதர் பக்தி சூத்திரம்: நிகழ்த்துபவர் -- மேனகா விஸ்வநாதன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு,காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
என்.எஸ்.எஸ்., முகாம் - எய்ட்ஸ் விழிப்புணர்வு: கொடி மங்கலம், கூலப்பாண்டி, ஊமச்சிக்குளம், திருமால்புரம், பள்ளி வளாகத் துாய்மைப்பணி, காலை 7:00 மணி, இளைஞர் நலம், பேசுபவர் - கணிதவியல் துறைத் தலைவர் அழகப்பன், காலை 10:30 மணி, உறவுகள், பேசுபவர் - -எய்ட்ஸ் விழிப்புணர்வு இயக்கம் பாலு, பங்கேற்பு: பேராசிரியர்கள் யசோத்குமார், குணசேகரன், அய்யனார் கருப்பையா, கவிதா, நுாலகர்செந்தில்குமார், ஏற்பாடு: யாதவர் கல்லுாரி, மாலை 6:00 மணி.
விளையாட்டு
18 வயதுக்குட்பட்டோருக்கான டென்னிஸ் போட்டி: மதுரைக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: டி.வி.எஸ்., மொபிலிட்டி, காலை 9:00 மணி முதல்மாலை 6:00 மணி வரை.
கண்காட்சி
மீனாட்சி பேன் ஹவுசின் ஏ.சி. கண்காட்சி, விற்பனை: மதுரா கோட்ஸ் மில் அருகில், நியூ ஜெயில் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல்இரவு 8:00 மணி வரை.
பட்டு, பனாரஸ், காட்டன் சேலைகள், வேட்டி, சட்டைகள், மெத்தை விரிப்புகள், திரைச்சீலைகள் உள்ளிட்டவைகளின் தள்ளுபடி விற்பனை:ஹேண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
பொது
புதிய திட்டப்பணிகள் துவக்கம்: கோவில்பாப்பாக்குடி ஊராட்சி, மதுரை, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: ஊரக வளர்ச்சித்துறை, காலை 9:00 மணி, அரிட்டாபட்டி, மேலுார், காலை 10:00 மணி.