ADDED : டிச 19, 2024 05:03 AM
கோயில்
விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.
தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி, குபேர சாயிபாபாவுக்கு ஆரத்தி, மாலை 6:30 மணி.
கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கரமடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி.
குருவாரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்புவீதி, மேட்டுத் தெரு, பெத்தானியாபுரம், மதுரை, மாலை 4:00 மணி, விசேஷ அலங்காரம், இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
மகாபாரதம்: நிகழ்த்துபவர் - அனந்த பத்மநாபாச்சாரியார், லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: ஸத்குரு சங்கீத சமாஜம், மதுரை அதிருத்ர மஹாயக்ஞ கமிட்டி, மாலை 6:30 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் - அழகர்கோவில் கோ மடம் சாமி, மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், இரவு 7:00 மணி.
விஷ்ணு சகஸ்ரநாமம், திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 6:00 மணி. ஏற்பாடு: ஹரி பக்த சமாஜம்.
சத்சங்கம், திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம்: தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், காலை 6:30 மணி.
சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: உஷா, முன்னிலை: வசந்தா, காலை 7:30 மணி.
அகண்டநாமம், சங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 5:30 மணி.
ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்த மூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00 மணி.
விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் - கருத்தரங்கு: தியாகராஜர் மேலாண்மை பள்ளி, மதுரை, காலை 9:00 மணி.
யாசகம் பெறும் குழந்தைகள் குறித்த நிகழ்ச்சி: மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை: செயலாளர் தர்மசிங், சிறப்பு விருந்தினர்: குழந்தைகள் நலன் சிறப்பு சேவைகள் துணை இயக்குநர் சூர்யகலா, காலை 10:30 மணி.
கல்லுாரி மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, சிறுகதை போட்டி: மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரி, தலைமை: முதல்வர் வானதி, சிறப்பு விருந்தினர்: மிட் டவுன் மதுரை ரோட்டரி சங்க தலைவர் ஜெயகோமதிநாயகம், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன், காலை 9:45 மணி.
மனவளப் பயிற்சி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: மனநல ஆற்றுப்படுத்துனர் நான்சி ஜெனிதா குமாரி, காலை 10:00 மணி, சிட் பண்டுகளில் முதலீட்டு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு, சிறப்பு விருந்தினர்: தமிழ்நாடு சிட் பண்டு நிறுவனங்கள் சங்க செயலாளர் செந்தில்குமார், காலை 11:00 மணி.
பொது
இளந்தமிழர் இலக்கிய பட்டறை: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, பங்கேற்பு: பேராசிரியர்கள் ராமச்சந்திரன், மாணிக்கவாசகன், கல்வெட்டு ஆய்வாளர் பார்த்திபன், முத்தமிழ் அறிவியல் மன்ற செயலாளர் லெனின் காந்தி, காலை 10:00 மணி.
ஓய்வூதியர் தினச் சிறப்பு கூட்டம்: மூட்டா அரங்கம், காக்கா தோப்பு, மதுரை, தலைமை: கல்யாணசுந்தரம், ஏற்பாடு: தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லுாரி ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம், காலை 10:30 மணி.
தபால்துறை குறைதீர்ப்பு கூட்டம்: முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகம், மதுரை, மதியம் 2:00 மணி, தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், பீபிகுளம், மதுரை, காலை 11:30 மணி.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - சி.ஐ.டி.யூ., சார்பில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் - வாயிற்கூட்டம்: போக்குவரத்துக் கழக தலைமையகம், மதுரை, சிறப்புரை: மாநில சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார், மதியம் 3:00 மணி.
மீன் வளர்ப்பு குறித்து ஒருநாள் பயிற்சி: வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை, பயிற்சியளிப்பவர்: மீன் வளத்துறை துணை இயக்குநர் (ஓ) காசிநாதன், காலை 10:00 மணி.