ADDED : டிச 26, 2024 05:03 AM
கோயில்
விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.
சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நரசிம்மருக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, காலை 9:00 மணி, குபேர சாயிபாபாவுக்கு ஆரத்தி, கூட்டு பாராயணம், மாலை 6:30 மணி.
கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கரமடம், சொக்கிகுளம், மதுரை, மாலை 5:30 மணி.
மண்டல பூஜை, அபிஷேகம், ஆராதனை: ஆனந்த ஐயப்பன் கோயில், குறிஞ்சி நகர், திருநகர், மதுரை, காலை 8:30 மணி, அன்னதானம், ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், மதியம் 12:00 மணி.
ஐயப்ப சுவாமி மண்டல பூஜை: முத்தையா சுவாமி கோயில், கோச்சடை, மதுரை, அபிஷேகம், ஆராதனை, காலை 9:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி, ஜெகதீஸ் பாண்டியன், பாண்டி முனீஸ்வரர் கலைக்குழுவின் பஜனை, ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், கோச்சடை கிளை, மாலை 5:30 மணி.
ஐயப்பன் மண்டல பூஜை, கணபதி ேஹாமம், சங்காபிேஷகம், பூதநாதர் ஆராதனை, காலை 11:00 மணி, அன்னதானம் மதியம் 12:00 மணி, புஷ்பாஞ்சலி மாலை 6:15 மணி. தீபாராதனை, இரவு 7:15 மணி, நவசக்தி விநாயகர் கோயில் டீன்ஸ் குடியிருப்பு, புது நத்தம் ரோடு, மதுரை.
பக்தி சொற்பொழிவு
திருப்பாவை: நிகழ்த்துபவர் - அழகர்கோவில் கோ மடம் சுவாமி, மதனகோபால சுவாமி கோயில், மதுரை, மாலை 6:00 மணி.
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00மணி.
சங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 5:30 மணி.
விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
மகா பெரியவா ஆராதனையை முன்னிட்டு குருவே சரணம் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன், பிராமண கல்யாண மண்டபம், பழைய தபால் அலுவலகம் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.
சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: விஸ்வநாதன், முன்னிலை: ரமீஷா, காலை 7:30 மணி.
சத்சங்கம், திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: பிராமண இளைஞர் சங்கம், மாலை 5:00 மணி.
விஷ்ணு சகஸ்ரநாமம், திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீஹரி பக்த சமாஜம், காலை 6:00 மணி
திருப்பாவை: நிகழ்த்துபவர் - பேராசிரியர் ஜகந்நாத் ராமாநுஜ தாஸர், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 6:30 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் - ஆசிரியை சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீ பூ கல்சுரல் அகாடமி, மாலை 6:00 மணி
அதிருத்ர மகா யாகம், மஹன்யாசம், காலை 6:30 மணி, ருத்ரஜபம், காலை 8:30 மணி, தீபாராதனை, காலை 11:00 மணி, பிரசாதம் வழங்குதல், மதியம் 12:00 மணி, ருத்ர கிரமார்ச்சனை, மார்கழி பக்தி திருவிழா உபன்யாசம், நிகழ்த்துபவர் - ரங்கசுவாமி தீட்சிதர், லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மதுரை அதிருத்ர மஹாயக்ஞ கமிட்டி, மாலை 4:00 மணி.
பொது
மண்டல பூஜை, அன்னதானம்: ஐயப்ப பக்த சபை, வாணியர் கிணற்று சந்து, நேதாஜி ரோடு, மதுரை, ஸ்ரீராம் சர்மா தலைமையில் யாகசாலை பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை, காலை 10:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி.
மதுரையில் சபரிமலை தரிசனம், மகரஜோதி, மண்டல பூஜை அபிஷேகம், ஆராதனை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, பங்கேற்பு: ஹரிஹரன் சுவாமி, ஏற்பாடு: ஆப்தன் சபா, மாலை 3:30 மணி முதல்.
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம்: சங்க கட்டடம், கலெக்டர் அலுவலக வளாகம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் ராமானுஜம், காலை 10:30 மணி.
ரமண மகரிஷி ஜெயந்தி விழா: தருமை ஆதீனம் சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்கு மாசி வீதி, மதுரை, ரமண இன்னிசை: பாட்டு - அனந்த கிருஷ்ணன், வித்யா, மிருதங்கம் - ரமேஷ், முகர்சிங் - கந்தவேல், 'அருணாசல பஞ்சரத்தினம்' சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - தயானந்த கல்லுாரி முதல்வர் (ஓ) பிரணதார்த்திஹரன், மாலை 6:30 மணி.
ஹிந்தி பேச்சு பயிற்சி: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல் நகர், மதுரை, பயிற்றுவிப்பவர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.
விளையாட்டு
ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் 4வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓப்பன் செஸ் போட்டி: ஓட்டல் அமிகா, ரிங் ரோடு, மதுரை, மற்றும் வல்லபா சி.பி.எஸ்.இ., பள்ளி, ஏற்பாடு: ஆனந்த் செஸ் அகாடமி, தமிழக செஸ் அசோசியேஷன், மதுரை செஸ் வட்டம், காலை 9:30 மணி முதல்.
15 வயதுக்குட்பட்டோர் ஹாக்கி போட்டி: ஹாக்கி மைதானம், எல்லீஸ் நகர், மதுரை, ஏற்பாடு: எல்லீஸ் நகர் ஹாக்கி அகாடமி, காலை 6:30 மணி.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: திருமால்புரம், செட்டிகுளம் ஊராட்சி, மதுரை, வழங்குபவர்: அமைச்சர் மூர்த்தி, காலை 9:00 மணி.
கண்காட்சி
புத்தகக் கண்காட்சி: சவிதாபாய் மேல்நிலைப்பள்ளி, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் மக்கள் மன்றம், திருநகர் அனைத்து வியாபாரிகள் சங்கம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மதுரை, காலை 9:00 மணி முதல்.