ADDED : டிச 31, 2024 04:51 AM
கோயில்
கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி முதல்.
ஸங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி.
விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.
திருஅத்யயன உற்ஸவம் - பகல்பத்து ராப்பத்து: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 9:30 மணி.
பெரியாழ்வார் திருமொழி தொடக்கம்: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், மதுரை, காலை 9:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் -- மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் -- பேராசிரியர் ஜகந்நாத் ராமானுஜதாஸர், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை காலை 6:30 மணி.
திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி 71வது ஆண்டு பாவை விழா: தருமபுரம் ஆதீனம் சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்கு மாசிவீதி, மதுரை, மதியம் 3:00 மணி.
விஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 6:00 மணி, ஏற்பாடு:ஹரி பக்த சமாஜம், திருப்பாவை: நிகழ்த்துபவர் - ஆசிரியை சுஜாதா, மாலை 6:00 மணி.
சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: ஜனரஞ்சனி, முன்னிலை: கீதா, காலை 7:30 மணி, திருப்பாவை: நிகழ்த்துபவர் - உதவி பேராசிரியர் துர்காதேவி, காலை 11:00 மணி.
சத்சங்கம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் -- விஜய்பாபு, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
அஷ்டபதி பஜனை திவ்ய நாமம்: சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்கு மாசி வீதி, மதுரை, மாலை 3:00 மணி.
பள்ளி, கல்லுாரி
திரைத்தமிழ் விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், பங்கேற்பு: முதல்வர் ஸ்ரீனிவாசன், தமிழ்த்துறை தலைவர் குபேந்திரன், ஆங்கிலத்துறை சிவக்குமார், இணைப்பேராசிரியர் லட்சுமி, காலை 10:00 மணி.
ரத்த சோகை விழிப்புணர்வு, பரிசோதனை முகாம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: பொது சுகாதார நிபுணர் சண்முகபிரியா, ஏற்பாடு: கல்லுாரி சுகாதார மையம், கணிதம் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை, கணினி அறிவியல்துறை, தேசிய சித்த மருத்துவ துறை, காலை 9:00 மணி.
பொது
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்: அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம், பைபாஸ் ரோடு, மதுரை, தலைமை: மண்டல தலைவர் முருகேசன், காலை 10:00 மணி.
வேங்கடரமண பாகவத சேவா ஸமாஜம் 244வது ஜெயந்தி இசை விழா: சவுராஷ்டிரா ஸபை, ஸ்ரீரங்க மஹால், 13, தெற்கு கிருஷ்ணன்கோயில் தெரு, மதுரை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லுாரி மாணவர்களின் நிகழ்ச்சி, தலைமை: கிருஷ்ணன், காலை 9:15 மணி, குரு ஸரணம்ஸரணம், நிகழ்த்துபவர் - சவுந்தரராஜன், காலை 11:00 மணி, ராணி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லுாரி மாணவர்களின் நிகழ்ச்சிகள், மாலை 4:00 மணி, ஆஞ்சநேய உற்ஸவம், இரவு 9:00 மணி.
பேராசிரியர்கள், நீர் ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டார்கள் 2024- -25 பற்றிய சந்திப்பு, கலந்துரையாடல்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: பேராசிரியர் நாகரத்தினம், சிறப்பு விருந்தினர்: மக்கள் சட்ட உரிமை இயக்கம் மாநில தலைவர்அண்ணாதுரை, ஏற்பாடு: நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர், பொதுநல அறக்கட்டளை, மதியம் 3:00 மணி.
விடுதலை போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸ் நினைவு நாள்: நினைவில்லம், திருமங்கலம், மாலை அணிவிப்பவர்: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 9:00 மணி
விளையாட்டு
ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் 4வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓப்பன் செஸ் போட்டி: ஓட்டல் அமிகா, மதுரை, ஏற்பாடு: ஆனந்த் செஸ் அகாடமி, தமிழக செஸ் அசோசியேஷன், மதுரை செஸ் வட்டம், காலை 9.30 மணி முதல்.
மருத்துவம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம்: ஏ.எச்.ஏ.பி., சென்டர், அண்ணாமலை இல்லம், 14, மருதுபாண்டியர் தெரு, வித்யா காலனி,கே.கே. நகர், மதுரை, காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
கண்காட்சி
புத்தகக் கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 80, மேலக்கோபுர தெரு, மதுரை, காலை 9:30 மணி முதல் இரவு 12:00 மணி வரை.
காட்டன் துணிகள், மற்றும் கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணிவரை.