sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : பிப் 01, 2025 05:21 AM

Google News

ADDED : பிப் 01, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தெப்பத்திருவிழா 2ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, கோயிலில் இருந்து கீழச்சித்திரை வீதி, மீனாட்சி கோயில் தெரு, தெற்காவணி மூல வீதி, தொட்டியான் கிணற்றுத் தெரு, சின்னக்கடை தெரு, தெற்கு வாசல் வழியாக செட்டியார் மண்டபத்தில் அம்மன், சுவாமி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல், காலை 9:00 மணி, மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி சின்னக்கடை தெரு, தொட்டியான் கிணற்றுத் தெரு வழியாக சித்திரை வீதிகளில் அம்மன் அன்ன வாகனம், சுவாமி பூத வாகனத்தில் எழுந்தருளல், இரவு 7:00 மணி.

தெப்பத்திருவிழா 4ம் நாள் - சுவாமி தெய்வானையுடன் வீதியுலா: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தங்கச்சப்பரம், காலை 9:00 மணி, சேஷ வாகனம், இரவு 7:00 மணி.

கும்பாபிஷேகம்: ஆதிகிருஷ்ணன் கோயில், உத்தங்குடி, காலை 9:00 மணி, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை 11:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி.

309வது உழவாரப்பணி: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தலைமை: தலைவர் பொன்னுச்சாமி, ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், மதுரை, காலை 9:30 மணி.

பக்தி சொற்பொழிவு

அகரமும் ஆண்டவனும் - திருக்குறள் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - இலங்கை ஜெயராஜ், ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், மதுரை, மாலை 5:45 மணி.

பள்ளி, கல்லுாரி

ஆண்டு விழா: எஸ்.பி.ஜே., மெட்ரிக் பள்ளி, அவனியாபுரம், தலைமை: முதல்வர் அபர்ணா, செயலாளர் பழனிசாமி, சிறப்பு விருந்தினர்: மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துகுமார், மாலை 5:30 மணி.

ஸ்டார்ட்அப் தமிழ்நாடு - புத்தாக்க வளர் மையம் துவக்க விழா: தியாகராஜர் மேலாண்மைக் கல்லுாரி, திருப்பரங்குன்றம், சிறப்பு விருந்தினர்: ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்ட இயக்குநர் சிவராஜா ராமநாதன், காலை 10:30 மணி.

எழுதுவது எப்படி - கருத்தரங்கு: தியாகராஜர் கல்வியியல் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் திருமலை, ஏற்பாடு: மதுரை தானம் அறக்கட்டளையின் பட்டறிவு பதிப்பகம், மதியம் 1:45 மணி.

தமிழர் திருநாள் சிறப்புக் கருத்தரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, மதுரை, தலைமை: பள்ளி தலைவர்: வரதராஜன், சிறப்புரை: எழுத்தாளர் பிரியாபாபு, ஏற்பாடு: தமிழ்ப்பேரவை, மாலை 5:30 மணி.

உலக சதுப்புநில தின நடைபயணம்: சாமநத்தம் கண்மாய், மதுரை, ஏற்பாடு: அமெரிக்கன் கல்லுாரி, காலை 7:00 மணி.

வளாக வேலைவாய்ப்பு முகாம்: வைகை பொறியியல் கல்லுாரி, மேலுார், நடத்துவோர்: கோவை எஸ்.இ.போர்ஜ் நிறுவனம், ஏற்பாடு: இயந்திரவியல் துறை, காலை 10:00 மணி.

பொது

உலக சதுப்புநில தினத்தை முன்னிட்டு இந்திய பறவைகள் சரணாலயம், ராம்சார் தளங்கள் தலைப்பில் புகைப்பட கண்காட்சி: அரசு அருங்காட்சியகம், மதுரை, திறந்து வைப்பவர்: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி.

ஆண்டு விழா: பிரீத்தம் - காயத்ரி தெரு பூங்கா, துரைசாமி நகர், பைபாஸ் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் கோவிந்தன், சிறப்பு விருந்தினர்கள்: அமைச்சர் தியாகராஜன், மேயர் இந்திராணி பொன்வசந்த், கவுன்சிலர் அமுதா தவமணி, ஏற்பாடு: துரைசாமி நகர் மக்கள் நலச்சங்கம், மாலை 6:00 மணி.

பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்த தினத்தை முன்னிட்டு கருப்பு தின ஆர்ப்பாட்டம்: முதன்மைக் கல்வி அலுவலகம், மதுரை, பங்கேற்பு: உறுப்பினர்கள், வட்டார, மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள், ஏற்பாடு: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, காலை 10:30 மணி.

சுற்றுலா கலைவிழா 2025: கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், கீழக்கரை, அலங்காநல்லுார், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, மாலை 4:00 மணி, கொக்களிக்கட்டை ஆட்டம், மாலை 5:00 மணி, நட்சத்திர நிகழ்ச்சி, ஏற்பாடு: அரசு சுற்றுலாத்துறை, மதுரை, மாலை 6:00 மணி.

நிதிநிலை அறிக்கை குறித்த கலந்துரையாடல்: தானம் கல்வி நிலையம், டி.மலைப்பட்டி, தென்கரை, வாடிப்பட்டி, நெறியாளர்கள்: இயக்குநர் குருநாதன், துணை இயக்குநர் தியாகராஜன், ஏற்பாடு: மதுரை தானம் அறக்கட்டளை, காலை 10:00 மணி.

சிகரம் தொடு - ரயில்வே வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கு: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: ஸ்டேஷன் மாஸ்டர் திலிப் குமார், காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை.

கண்காட்சி

'கிரடாய் மதுரை பேர்புரோ' - கட்டடம், வீட்டடி மனை கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

கட்டுமான பொருட்கள், இன்டிரியர், எக்ஸ்டிரியர், ஹோம் டெக்கர்ஸ், பர்னிச்சர்களுக்கான கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை.

காட்டன் பேப் - காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் கண்காட்சி, விற்பனை: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.

ஸ்னோ வேர்ல்ட் பனிமலை பொருட்காட்சி: யூ.சி., பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us