ADDED : ஏப் 03, 2025 04:36 AM
கோயில்
ராமநவமி உற்ஸவம் வேணுகோபாலன் அலங்காரம் : சீதா ராமாஞ்சநேய சபை, 46, மகால் 5வது தெரு, மதுரை, காலை 9:00 மணி.
பாரதீ தீர்த்த சுவாமிகள் 75ம் உற்ஸவம், 75வது வர்தந்தி வைபவம், ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், தீபாராதனை: சிருங்கேரி சங்கரமடம், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 7:30 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி.
குரு வாரத்தை முன்னிட்டு காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை: ஸ்ரீ மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, பூஜை செய்பவர்: சந்தோஷ சாஸ்திரிகள் குழுவினர், ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லைபாலு, மாலை 5:30 மணி.
பங்குனி திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம், காளியம்மன் கோயில், நகை கடை பஜார், மேலுார், மாலை 5:00 மணி, அம்மன் வீதி உலா, மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
அகண்டநாமம் மற்றும் அன்னதானம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 முதல் மாலை 6:00 மணி.
குருதத்துவத்தின் சிறப்பு, முக்கியத்துவம் : நிகழ்த்துபவர் - மகாதேவன், சிருங்கேரி மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரை திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
அனுமன் துாது: நிகழ்த்துபவர் கீதாபாரதி, கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
67 வது கல்லுாரி நாள் விழா: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, திருப்பரங்குன்றம், தலைமை: இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, காலை 10:30 மணி.
சட்டம் குறித்த சிறப்பு கருத்தரங்கு: அரசு சட்டக் கல்லுாரி, மதுரை, தலைமை: உயர்நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, பேசுபவர்கள்: தமிழ்நாடு சட்டக்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி, முதல்வர் குமரன், மதியம் 2:00 மணி.
தமிழ்மன்ற கருத்தரங்கம்: எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிர வைசியர் கல்லுாரி கல்லம்பட்டி, தலைமை : முதல்வர் சிவாஜிகணேசன், முன்னிலை : தமிழ்த்துறைத்தலைவர் செல்வகுமார் பாண்டி, காலை 10:30 மணி.
பள்ளி ஆண்டுவிழா மற்றும் 23வது கிண்டர் கார்டன் பட்டமளிப்பு விழா: மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளி, சிம்மக்கல், மதுரை, தலைமை: தாளாளர் ஜோதி செந்தில்வேல் முருகன், சிறப்பு விருந்தினர் : மதுரை முத்து, காலை 9:30 மணி.
பொது
மார்க்சிஸ்ட் கம்யூ., 24ம் அகில இந்திய மாநாட்டில் சிறப்பு கருத்தரங்கு : தமுக்கம் மைதானம், மதுரை, தலைமை : மத்தியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், சிறப்புரை : முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராய் விஜயன், கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, மாலை 5:00 மணி.
மதுரை வடக்கு பகுதி மின்நுகர்வோர் குறைதீர் முகாம்: தலைமை: செயற்பொறியாளர் ஸ்ரீராம், மின்வாரிய மண்டல அலுவலக வளாகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி.
ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான அன்னதான நிகழ்ச்சி: தமிழ்நாடு மகா சவுராஷ்டிரா சபா, லோகந்தா வகையறா மகால், லட்சுமிநகர் 3வது தெரு, சவுராஷ்டிரபுரம் பஸ் ஸ்டாப், வண்டியூர், மதுரை,
மாதாந்திர உழவாரப்பணி : கள்ளழகர் கோயில் வளாகம், அழகர்கோவில், ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.
கண்காட்சி
விவேகானந்தா சாரீஸ் ஹவுஸ் ஆப் சில்க் காட்டன் அண்ட் பியூர் சில்க்ஸின் புடவை, சுரிதார் மெட்டீரியல்கள் கண்காட்சி மற்றும் விற்பனை: அர்பன் ஸ்பைஸ், கே.கே. நகர், மதுரை, காலை 9:30 முதல் இரவு 8:30 மணி வரை.
மருத்துவம்
பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நரிமேடு, மதுரை, ஆலோசனை வழங்குபவர் : டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.
பொது மருத்துவ சிறப்பு ஆலோசனை முகாம்: தேவதாஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

