ADDED : ஏப் 04, 2025 05:14 AM
கோயில்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர் கூடாரம் திறப்பு வைபவம்: மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதிகள், மதுரை, காலை 9:00 மணி.
கோயில் உற்ஸவம் தீர்த்தம் எடுத்து அபிஷேகம், பொங்கல் வைத்து ஆராதனை: சவுடார்பட்டி காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி, குருநாதசுவாமி கோயில், 26, வைக்கோல்காரத் தெரு, சின்னக்கடை வீதி, தெற்குவாசல், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீ கிருஷ்ண விலாசபலிஜ சபா தலைவர் ராதாகிருஷ்ணன், இரவு 7:00 மணி.
65ம் ஆண்டு ராமநவமி உற்ஸவம் - - சீதாதேவி அலங்காரம்: சீதாராமாஞ்சநேய சபை, 46, மகால் 5வது தெரு, மதுரை, காலை 9:00 மணி.
சாந்தி யோகா தியானம்: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், 10, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:15 மணி.
பங்குனி திருவிழா ஹோமம்: தேவி கருமாரியம்மன் கோயில், 8, கான்பாளையம் குறுக்குத்தெரு, மதுரை, காலை 7:00 மணி, மஹாபூர்ணாஹூதி, காலை 10:00 மணி, அபிஷேகம், சிறப்பு பூஜை, காலை 11:00 மணி, பிரசாதம் வழங்குதல், மதியம் 12:00 மணி, விளக்கு பூஜை,மாலை 5:30 மணி, பஞ்சாங்கம் வாசித்தல், இரவு 9:00 மணி.
விளக்கு பூஜை: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, மாலை 6:00 மணி.
அபிஷேகம், அதிகாரநிலை அதிகாரம்: முனியாண்டி கோவில், 2, யூனியன் பேங்க் காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.
பாரதி தீர்த்த சுவாமிகளின் 75ம் ஆண்டு உற்ஸவம்: சிருங்கேரி சங்கரமடம், பைபாஸ் ரோடு, மதுரை, விஸ்வேஸ்வரருக்கு சகஸ்ரநாம லட்சார்ச்சனை, தீபாராதனை, காலை 8:00 மணி.
பங்குனி திருவிழா - சுவாமி சிலைகள் ஊர்வலம், வீரகாளிஅம்மன் கோயில், தும்பைபட்டி, மாலை 4:00 மணி.
பங்குனி திருவிழா - பால்குடம் எடுத்தல்: தேவியம்பு கருப்பு சுவாமி கோயில், கச்சிராயன்பட்டி, காலை 8:00 மணி.
பக்தி சொற்பொழிவு
சத்சங்கம், சிவபுராண, லலிதா சகஸ்ர நாம பாராயணம்: நிகழ்த்துபவர்கள் -- கீதாபவனம் பாராயணக்குழு, தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சிவானந்த சுந்தரனாந்தா, மாலை 6:00 மணி.
யுத்த காண்டம் ராவணன் வதைப்படலம்: நிகழ்த்துபவர் -- ஜனார்த்தனன்பாபு, கீதாபவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.
திருக்குறள்: நிகழ்த்துபவர் -- பெரியகருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00மணி.
ராமநவமி சொற்பொழிவு -- யோகமும், போகமும்: நிகழ்த்துபவர் - நாகை முகுந்தன், எஸ்.எம்.கே., மண்டபம், 12, பொன்மேனி நாராயணன்ரோடு, எஸ்.எஸ். காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம், மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
விளையாட்டு, கல்லுாரி விழா: கே.ஆர். கல்லுாரி, டி.கல்லுப்பட்டி, பங்கேற்பு: தாளாளர் பாண்டியராஜன், முதல்வர் செந்தில்குமார், காலை 10:00 மணி.
மாணவர் பேரவை நிறைவு விழா, கல்லுாரி மலர் வெளியீட்டு விழா: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, அவனியாபுரம், மதுரை, சிறப்புவிருந்தினர்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா, காலை 11:00 மணி.
ரத்த தான முகாம்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், பங்கேற்பு: மதுரை காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ்.,ஒருங்கிணைப்பாளர் பாண்டி, ஏற்பாடு: என்.எஸ்.எஸ்., குழு, காலை 9:00 மணி.
பணி நிறைவுபெற்ற பேராசிரியர்களுக்கு நிறைவு விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, காலை 9:00 மணி.
பொது
மார்க்சிஸ்ட் கம்யூ., 24ம் அகில இந்திய மாநாடு - கலை நிகழச்சி, கருத்தரங்கம்: தமுக்கம் மைதானம், மதுரை, பங்கேற்பு: நடிகர்கள் விஜய்சேதுபதி, சமுத்திரக்கனி, இயக்குனர் வெற்றிமாறன், மாலை 5:00 மணி.
அனுதினம் அன்னதானம்: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, லட்சுமி நகர் 3வது தெரு, வண்டியூர், மதுரை, மதியம் 12:30 மணி.
சர்வசமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாராசாமி ராஜாதெரு, செனாய் நகர், மதுரை, தலைமை: செயலாளர்மோகன், அருட்செய்தி: பரமார்த்தலிங்கம், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி முன்னாள் செயலாளர் மூக்கையா தேவர் 102ம் பிறந்த நாள்- மாலை அணிவித்து மரியாதை: பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் கல்லுாரி, உசிலம்பட்டி, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் மணிமாறன், ஏற்பாடு: மதுரை வடக்கு, தெற்கு தி.மு.க.,, காலை 9:00 மணி.
மருத்துவம்
பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நரிமேடு, மதுரை, ஆலோசனை வழங்குபவர்:டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.
பொது மருத்துவ சிறப்பு ஆலோசனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, 75, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.
கண்காட்சி
சில்க் காட்டன், சில்க்ஸ் சேலைகள் சித்திரை சிறப்பு விற்பனை: அர்பன் ஸ்பைஸ், 472, கே.கே. நகர், மதுரை, ஏற்பாடு: விவேகானந்த சேலைகள், காலை 10:00 மணி முதல்.