ADDED : ஏப் 11, 2025 05:46 AM
கோயில்
பங்குனி திருக்கல்யாண விழா: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சுந்தரராஜப்பெருமாள் நான்கு பிராட்டிகளுடன் ஏகாசனத்தில் திருக்கல்யாணம், காலை 9:45 மணி முதல் 10:15 மணி வரை, சப்பரத்தில் புறப்பாடாகி சன்னதிக்கு எழுந்தருளல், இரவு 7:30 மணி.
ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர், மதுரை, காலை 9:30 மணிக்கு மேல், துர்க்கை அம்மனுக்கு பெண்கள் கூட்டு பாராயணம், அபிஷேகம், அலங்காரம், காலை 10:30 மணி.
பவுர்ணமி வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், 10, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.
சுக்ரவாரம் ஸ்ரீமந்த்ராலய மகான், ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் விழா, ஆஞ்சநேய உற்ஸவம்: துர்கா இல்லம், 7, வியாசர் தெரு, பழனிமுத்து நகர், வில்லாபுரம், மதுரை, மாலை 6:00 மணி, ராம, சீதா, ஆஞ்சநேய அஷ்டோத்ரம், ஹரி பஜனை, மாலை 6:30 மணி.
பங்குனி உத்திர திருக்கல்யாணம் -அலங்கார திருமஞ்சனம்: வெங்கடாஜலபதி, கோயில் அண்ணாநகர், மதுரை, காலை 10:00 மணி, ஸ்ரீதேவி, பூமாதேவி, பத்மாவதி, கோதா நாயகி, ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம், மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.
அகண்டநாமம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
பங்குனி திருவிழா பால்குடம் எடுத்தல்: சக்தி மாரியம்மன் கோயில், மேலுார், காலை 8:00 மணி.
பங்குனி உத்திரம் திருக்கல்யாண வைபவம்: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, வியூக சுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம், காலை 9:00 மணி.
பங்குனி உத்திரம்
முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில், கருப்பணசுவாமி கோயிலிலிருந்து 108 பால்குடங்கள் பாதயாத்திரையாக எடுத்து முருகன் கோயில் வருதல், காலை 8:00 மணி, பாலாபிஷேகம், தீப துாப ஆராதனை, சுவாமி புறப்பாடு, மதியம் 12:00 மணி.
4ம் ஆண்டு விழா, அபிஷேகம், ஆராதனை: வேடன் முருகன் கோயில், பசுமலை, மதுரை, காலை 9:00 மணி, அன்னதானம், காலை 11:00 மணி.
சிறப்பு பூஜை, ஆயுததாரி அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், 2, யூனியன் பாங்க் காலனி, 4ம் தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.
வீரகாளியம்மன் கோயில், ஜெய்ஹிந்த்புரம், மதுரை, பால்குடம், அலகு குத்துதல், பறவை காவடி எடுத்தல், அபிஷேகம், தீபாராதனை, காலை 6:00 மணி, அன்னதானம், காலை 9:00 மணி, சக்தி கரகத்துடன் அம்மன் பூப்பல்லக்கில் வீதி சுற்றி வருதல், இரவு 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருக்குறள்: நிகழ்த்துபவர் - - பெரியகருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
நாராயணீயம்: நிகழ்த்துபவர் - - சுப்பராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
51ம் கல்லுாரி தின விழா: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பசுமலை, மதுரை, தலைமை: தலைவர் ராஜகோபால், சிறப்பு விருந்தினர்: சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை போலீஸ் உதவி கமிஷனர் குருசாமி, காலை 10:00 மணி.
2ம் ஆண்டு பள்ளி விழா: புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளி, ஆத்திகுளம், கே. புதுார், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: அரவிந்த் கண் மருத்துவமனை செயலாக்கம் இயக்குனர் துளசிராஜ், இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில தலைவர் சாமிதுரை, ஆனந்த் எக்ஸ்போர்ட்ஸ் சி.இ.ஓ., ஆனந்த் கணேசன், சக்தி கார்ட்ஸ் நிர்வாக இயக்குனர் ஷ்யாம் பிராகாஷ் குப்தா, ஏற்பாடு: ஐஸ்வர்யம் டிரஸ்ட், காலை 10:00 மணி.
60ம் ஆண்டு விளையாட்டு விழா: அரசு மீனாட்சி கல்லுாரி, மதுரை, தலைமை: வானதி, சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை உதவி பேராசிரியர் ரமேஷ், காலை 10:00 மணி.
பொது
மகாவீரர் ஜெயந்தி சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய்நகர், மதுரை, ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், தலைமை: செயலாளர் மோகன், பங்கேற்பு: மதுரை காமராஜ் பல்கலை சைவ சித்தாந்த தத்துவத்துறை பட்ட ஆய்வாளர் பாண்டியராஜா, மாலை 6:00 மணி.
மருத்துவம்
பொது மருத்துவ சிறப்பு ஆலோசனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.