ADDED : ஏப் 17, 2025 06:31 AM
கோயில்
பூச்சொரிதல் விழா: தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், மதுரை, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அம்மன் எழுந்தருளல், மாலை 6:00 மணி.
வாராஹி அம்மனுக்கு அபிஷேகம், கூட்டு பாராயணம்: கற்பகம் விநாயகர் கோயில், பூங்கா நகர், கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி: குபேர சாய்பாபாவிற்கு ஆரத்தி, பெண்கள் கூட்டு பாராயணம், மாலை 6:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவாசகம்: நிகழ்த்துபவர் -- வெங்கடாசலம், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
தியானமும் யோகமும்: நிகழ்த்துபவர் - சங்கர்லால், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம்: தெற்குவாசல் மார்க்கெட் அருகில், மதுரை, பேசுபவர்கள்: எம்.பி., வெங்கடேசன், நகர் செயலாளர் கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் விஜயராஜன், மாலை 5:00 மணி.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாலைநேர தர்ணா: கலெக்டர் அலுவலகம் எதிரில், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் விசாலாட்சி, பேசுபவர்கள்: அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் நீதிராஜா, தமிழ், சந்திரபோஸ், மதியம் 3:00 மணி.
வாழ்வூதியம் கோரும் ஊர்வலம்: துவங்குமிடம்: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: அரசு ஊழியர் சங்கம், தலைமை: மாவட்ட தலைவர் சின்னபொண்ணு, துவக்கி வைப்பவர்: அரசு சுகாதார போக்குவரத்து துறை சங்க முன்னாள் தலைவர் நடராஜன், மாலை 5:30 மணி.
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் எதிரில், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் பாண்டிவேல், காலை 10:30 மணி.
பள்ளி கல்லுாரி
60 வது பட்டமளிப்பு விழா: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் லட்சுமிகுமரன் சேதுபதி, பட்டமளிப்பு உரை: காந்தி கிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம், காலை 10:30 மணி.
மருத்துவம்
மூட்டுவலி சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 மணி முதல் 6:00 வரை.