ADDED : ஏப் 22, 2025 06:11 AM
கோயில்
பூச்சொரிதல் விழா: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, தீச்சட்டி, பால்குடம் எடுத்து, அம்மன் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி தெப்பக்குளம் சுற்றி வருதல், அபிஷேகம், இரவு 7:25 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் --- மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் -- சுவாமி நித்யசத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.
108 திவ்யதேச வைபவம்: நிகழ்த்துபவர் -- அரவிந்தலோசனன் சுவாமி, மதன கோபால சுவாமி கோயில், மேலமாசிவீதி, மதுரை, மாலை 6:30 மணி.பொது
கோடைகால பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: யோகா ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், ஏற்பாடு: மியூசிய செயலாளர் நந்தாராவ், காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை.
மின்நுகர்வோர் குறைதீர் முகாம்: செயற்பொறியாளர் அலுவலகம், உசிலம்பட்டி, தலைமை: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 மணி முதல்.
உலக மரபு விழாவை முன்னிட்டு கிராமிய கலை நிகழ்ச்சிகள்: திருமலை நாயக்கர் மகால், மதுரை, ஏற்பாடு: தொல்லியல்துறை, காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.மருத்துவம்
மூட்டுவலி சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை.