ADDED : மே 02, 2025 06:36 AM
கோயில்
சித்திரை திருவிழா - 4ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தங்கப்பல்லக்கில் சித்திரை வீதிகள், தெற்காவணி மூல வீதி, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் செல்லுதல், அழகப்ப பிள்ளை தானப்ப பிள்ளை வகையறா பாகற்காய் மண்டகப்படி எழுந்தருளல், காலை 9:00 மணி, தொட்டியன் கிணற்றுத் தெரு வழியே தெற்கு சித்திரை வீதிகள் வலம்வந்து கோயில் சேருதல், மாலை 6:00 மணி.
ராமனுஜர் 1008ம் திருநட்சத்திர விழா: நவநீத கண்ணன் சன்னதி, 269, கீழமாரட் வீதி, மதுரை, யாகபூஜை திருமஞ்சனம், காலை 6:00 மணி, ராமனுஜர் பட்டுப் பல்லக்கில் புறப்பாடு, நவநீதக்கண்ணன் கள்ளழகர் கோலம், சாத்தறை கோஷ்டி, மாலை 4:30 மணி.
சிருஷ்டி விண்ணப்பம் வாசிப்பு, தியானம்: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:15 மணி.
சங்கர ஜெயந்தி மஹோத்சவம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மஹன்யாச புரஸ்தர ருத்ர ஏகாதசினி அபிஷேகம், அர்ச்சனை, காலை 8:00 மணி, தீபாராதனை, பிரசாதம், மதியம் 12:30 மணி, ஆதிசங்கரர் அருளிய அஷ்டோத்திர பாராயணம், மாலை 5.30 மணி.
விஷேச அபிஷேகம், புன்னகை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், 2, யூனியன் பேங்க் காலனி, 4ம் தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.
கும்பாபிஷேகம், பொன்னாண்டி அம்மன் கோயில், முத்து ராமலிங்கம் பட்டி, காலை 9 :00 மணி.
சங்கர ஜெயந்தி உற்ஸவம், உபநிஷத் பாராயணம், அபிேஷகம், அலங்காரம், அர்ச்சனை, மாலை 5:00 மணி, ஆதிசங்கரர் சிறப்பு சொற்பொழிவு, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாலை 6:30 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.
சங்கரஜெயந்தி உற்ஸவம், குரு வந்தனம், அனுக்ஞை, உபநிஷத் பாராயணம், தீபாராதனை, ஆசியுரை: விவேகானந்த மேல்நிலைப்பள்ளி ஸ்ரீ பரமானந்த மகராஜ், விவேகானந்தா கல்லுாரி அத்யாத்மானந்த மகராஜ், மாலை 4:30 மணி, காஞ்சி காமகோடி மடம், அக்ரஹாரம், முள்ளிப்பள்ளம், சோழவந்தான்.
பக்தி சொற்பொழிவு
திருக்குறள்: நிகழ்த்துபவர் - பெரியகருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
சத்சங்கம், சிவபுராண, லிலதா சகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர்கள் - கீதாபவனம் பாராயணக்குழு, தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, மாலை 6:00 மணி, ஆதி சங்கரரும், ராமனுஜரும், நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், தலைமை: சுவாமி சிவனாந்த சுந்தரானந்தா, இரவு 7:30 மணி.
சங்கர ஜெயந்தி: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.
பொது
கோடைகால இலவச பயிற்சி - ஹிந்து சமய கலாசாரம், பண்பாடு: ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் வேத பாட சாலை, 14, சி.எம்.ஆர்., ரோடு, மதுரை, காலை 10:00 மணி.
கோடைகால விளையாட்டு, கல்வியிடைப் பயிற்சி: அரசு மியூசியம், மதுரை, காலை 10:00 மணி.
அனுதினம் அன்னதானம்: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, லட்சுமி நகர், 3ம் தெரு, வண்டியூர், மதியம் 1:00 மணி.
குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம் - பலுான் சிற்பங்கள் செய்தல் பயிற்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பயிற்சியளிப்பவர்: பிரகதீஸ்வரன், காலை 11:00 மணி.
ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி மற்றும் இரவு 7:00 மணி
கண்காட்சி
உணவு தொழில்நுட்ப கருத்தரங்கு கண்காட்சி, பில்ட் எக்ஸ்போ - தொடக்க விழா: ஐடா ஸ்கட்டர் ஆடிட்டோரியம், மதுரை, ஏற்பாடு: மடீட்சியா, தலைமை: தலைவர் கோடீஸ்வரன், சிறப்பு விருந்தினர்: டி.என்.ஏ.பி.இ.எக்ஸ்., நிறுவன நிர்வாக இயக்குனர் அழகுசுந்தரம், தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் செல்வராஜன், காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை.
கல்விக் கண்காட்சி, உயர்கல்வி வழிகாட்டி முகாம்: லேடி டோக் கல்லுாரி, மதுரை, காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
ஆர்ட் கேலரி - கலைக் கண்காட்சி: வி.எஸ்., செல்லம் நுாற்றண்டு ஹால், காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: தியாகராஜர் கல்லுாரி துணைத் தலைவர் உமா கண்ணன், மாலை 5:00 மணி.