ADDED : ஜூன் 12, 2025 02:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: பரவை பேரூராட்சி ஊர்மெச்சிகுளத்தில் கள்ளிக்குடி ரோட்டில் சில ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்த கட்டண சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
கழிப்பறை அருகே இருந்த பழுதடைந்த அங்கன்வாடி மையம் ஓராண்டிற்கு முன் இடிக்கப்பட்டது.
அப்போது அங்கன்வாடி மைய சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த மகளிர் கழிப்பறைக்கு செல்வதற்கான கதவு சேதமடைந்து விழுந்தது. இன்று வரை கதவு சீர் செய்யப்படாததால் பெண்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆண்கள் பகுதி மட்டும் பயன்பாட்டில் உள்ளது. இந்த கதவினை கழிப்பறை சுவரில் மாற்றி அமைத்தால் இப்பகுதி பெண்களும் கழிப்பறையை பயன்படுத்தலாம்.
ஆனால் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.