/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சனி, ஞாயிறு வரிவசூல் மையங்கள் செயல்படும்
/
சனி, ஞாயிறு வரிவசூல் மையங்கள் செயல்படும்
ADDED : பிப் 15, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாநகராட்சியில் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சொத்து, குடிநீர் வரி, பாதாளச் சாக்கடை பராமரிப்பு கட்டணம் ஆகிய வரி வருவாய் இனங்கள் மூலமும், வரியில்லாத வருவாய் இனங்கள் மூலமும் பல்வேறு அடிப்படை வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வகை வரிகளை வசூலிக்கும் வகையில் பிப்ரவரி, மார்ச்சில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கணினி வரிவசூல் மையங்கள் செயல்படும். எனவே மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரிகளை செலுத்தவேண்டும் என கமிஷனர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

