ADDED : ஜன 28, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நுாற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில் சனி, ஞாயிறுகளில் இலவச கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
பிப். 1 முதல் 23 வரை சனி, ஞாயிறுகளில் மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை பரதம், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, இசை கச்சேரி, நட்சத்திர நிகழ்ச்சி நடத்தப்படும். பிப். 11 தைப்பூசத்தன்று சிறப்பு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.

