/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாரம்பரியத்தைத் தாண்டி முன்னேறாத சுற்றுலாத்துறை; தொடர்ந்து சுணக்கத்தில் இருக்கும் மதுரை மாவட்டம்
/
பாரம்பரியத்தைத் தாண்டி முன்னேறாத சுற்றுலாத்துறை; தொடர்ந்து சுணக்கத்தில் இருக்கும் மதுரை மாவட்டம்
பாரம்பரியத்தைத் தாண்டி முன்னேறாத சுற்றுலாத்துறை; தொடர்ந்து சுணக்கத்தில் இருக்கும் மதுரை மாவட்டம்
பாரம்பரியத்தைத் தாண்டி முன்னேறாத சுற்றுலாத்துறை; தொடர்ந்து சுணக்கத்தில் இருக்கும் மதுரை மாவட்டம்
ADDED : ஏப் 01, 2024 05:58 AM

மதுரை : பாரம்பரியத்தைத் தாண்டி சுற்றுலாத்துறையில் எந்த முன்னேற்றமும் செய்யாததால் மதுரை மாவட்டமே சுற்றுலா அளவில் சுணக்கத்தில் உள்ளது.
மதுரை வரும் வெளிநாட்டு வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், திருமலை நாயக்கர் மகாலைத் தவிர பிற இடங்கள் அதிகம் காண்பிக்கப்படுவதில்லை.
டூர் ஆப்பரேட்டர்களும் இதற்கு தான் முக்கியத்துவம் தருகின்றனர். வாடிப்பட்டி அருகிலுள்ள குட்லாம்பட்டி நீர்வீழ்ச்சியை சீரமைக்க வனத்துறை சார்பில் மதிப்பீடு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஐந்தாண்டு காலமாக சீசன் தோறும் நீர்வீழ்ச்சியில் குளிக்கமுடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
சோழவந்தான் தென்கரை அருகில் மதுரை திண்டுக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில் வைகையாற்றில் அரைவட்ட வடிவில் கட்டப்பட்ட தடுப்பணை உள்ளூர் பயணிகளை கவர்ந்தாலும் சுற்றுலாத் திட்டத்தில் இதுவரை நிதி ஒதுக்கி சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படவில்லை.
மதுரையில் யானைமலை, சமணர் மலை, கொங்கர் புளியங்குளம், அரிட்டாபட்டி உட்பட 18 மலைகளிலும், குன்றுகளிலும் சமணர் படுகைகள் உள்ளன. ஒன்றிரண்டைத் தவிர மற்றவற்றுக்கு செல்வதற்கான பாதை வசதியோ, போக்குவரத்தோ, கழிப்பறை, குடிநீர் வசதிகளோ இல்லை.
மகாலில் இருந்து மீனாட்சியம்மன் கோயில் வரையும் கோயில் மேற்கு கோபுரத்தில் இருந்து பெரியார் பஸ் ஸ்டாண்ட் வரையான பாரம்பரிய இரண்டு நடைபயண ரூட் இருந்தும் முழுமையாக செயல்படுத்தவில்லை. மகாலின் உட்புற அழகை மட்டுமே பயணிகள் பார்க்க முடிகிறது. உட்பகுதி காரிடார் வழியாகவும் வெளிப்பகுதி வழியாகவும் மகாலை ரசிக்கும் வகையில் திட்டமிடப்படவில்லை. பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு வணிகப்பாதையாக செயல்பட்ட விக்கிரமங்கலம், திடியன், தர்க்காகுடி பாதைகள் மீட்டெக்கப்பட்டு சீரமைக்கப்படவில்லை.
இளைஞர்கள் பெரிதும் விரும்பும் நீர்வீழ்ச்சி, தடுப்பணை பாதைகளை சுற்றுலாத்துறை விரைவில் சரிசெய்து மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

