ADDED : ஜூலை 24, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் பேரூராட்சி தலைவர் குருசாமி கடந்த மாதம் இறந்ததை தொடர்ந்து தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை (ஜூலை 25) நடக்கிறது.
பேரூராட்சியில் தி.மு.க., 8, காங்., 4, சுயே., 1 என மொத்தம் 13 கவுன்சிலர்கள் உள்ளனர். கடந்தாண்டு தி.மு.க.,வைச் சேர்ந்த துணைத் தலைவர் பாஸ்கரன் இறந்தார். அப்பதவிக்கு தி.மு.க., பிரியதர்ஷினி தேர்ந்தெடுக்கப்பட்டார். இறந்த குருசாமி காங்கிரசை சேர்ந்தவர் என்பதால் புதிய தலைவரும் அக்கட்சியில் இருந்தே தேர்வு செய்யப்பட உள்ளார்.