நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே அரியூரில் அய்யனார் சுவாமி கிடமாட்டு தொழுவகம் கோயில் மண்டலாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக மறு தினம் முதல் நடந்த மண்டல பூஜை நேற்று நிறைவு செய்யப்பட்டு யாக பூஜைகள் நடந்தன. பின் சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை விழா குழு நிர்வாகி ராதாகிருஷ்ணன், கிராமமக்கள் செய்திருந்தனர்.