/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'ரன்வே' விரிவாக்க பணியில் அண்டர்பாஸ்' மறுபரிசீலனை முதல்வரிடம் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

ADDED : ஜன 23, 2025 04:35 AM
மதுரை: ''மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பாதையில் 'அண்டர்பாஸ்' பாலம் அமைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என மதுரையில் முதல்வர் ஸ்டாலினிடம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கோரிக்கை வைத்தார்.
சங்க நுாற்றாண்டு நிறைவு விழாவில் ஜெகதீசன் பேசியதாவது: மதுரையில் டைடல் பார்க் வருவது நல்ல விஷயம். மதுரை - துாத்துக்குடி தொழில் வழித்தடம் உருவானால் இப்பகுதி மக்கள் வேலை வாய்ப்புக்காக வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 2013 ல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் 12 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. முதல்வர் முயற்சி செய்தால் இதை சாத்தியமாக்கலாம்.
மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கு அருகிலுள்ள ரிங்ரோட்டில் 'அண்டர் பாஸ்' அமைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ரோடு விரிவாக்கத்தால் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒருமுறை விமான நிலையத்தைத் தாண்டி தென்பகுதிக்கு வரவேண்டிய அரசு பஸ்கள் 7 கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான எரிபொருள் செலவு மட்டும் மாதத்திற்கு கோடிக்கணக்கில் வீணாகும். அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார். கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.