/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமுக்கத்தில் வர்த்தக கண்காட்சி துவக்கம்
/
தமுக்கத்தில் வர்த்தக கண்காட்சி துவக்கம்
ADDED : ஜன 01, 2026 05:47 AM

மதுரை: மதுரையில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் தமுக்கம் மைதானத்தில் வர்த்தக கண்காட்சி துவக்க விழா நேற்று நடந்தது.
மாநகராட்சி கமிஷனர் சித்ரா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதயம் நிறுவன இயக்குநர் முத்து, டி.எம்.பி., மண்டல மேலாளர் ஜெபநாத் ஜூலியஸ் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சி கமிட்டி தலைவர் மாதவன், துணைத் தலைவர்கள் திருமுருகன், சூரஜ்சுந்தர சங்கர், வினோத் கண்ணா, கிேஷார், ஒருங்கிணைப்பாளர்கள் வேல்சங்கர், ஜெயபிரகாசம், உணவு பொருள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சாய் சுப்பிரமணியன், கார்த்திகேயன்உள்ளிட்டோர் பங்கேற்றனர். கண்காட்சியில் 260 ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன.
ஜன.,4 வரை காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.

