/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை தமுக்கத்தில் டிச.22 முதல் வர்த்தக கண்காட்சி தினமும் குலுக்கல் முறையில் பரிசு மழை
/
மதுரை தமுக்கத்தில் டிச.22 முதல் வர்த்தக கண்காட்சி தினமும் குலுக்கல் முறையில் பரிசு மழை
மதுரை தமுக்கத்தில் டிச.22 முதல் வர்த்தக கண்காட்சி தினமும் குலுக்கல் முறையில் பரிசு மழை
மதுரை தமுக்கத்தில் டிச.22 முதல் வர்த்தக கண்காட்சி தினமும் குலுக்கல் முறையில் பரிசு மழை
ADDED : டிச 19, 2024 05:07 AM
மதுரை: மதுரை தமுக்கத்தில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் (டி.எப்.எம்.ஏ.,) சார்பில் வர்த்தக கண்காட்சி டிச. 22 முதல் 25 வரை நடக்கிறது.
முதல் நாள் மாலை 5:00 மணிக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த்துவக்கி வைக்கிறார். மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மண்டல மேலாளர் ஜெபநாத் ஜூலியஸ் பங்கேற்கின்றனர்.
150க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் மின்னணு சாதனங்கள், ஆடை, ஆபரணங்கள், கட்டுமானபொருட்கள், உடல் ஆரோக்கிய 'பிட்னஸ்' ஸ்டால்கள், சூரிய ஒளி மின்சாரம் குறித்த ஸ்டால்கள், நவீன மருத்துவ முறைகள் குறித்து வடமலையான் மருத்துவமனையின் பிரத்யேக ஸ்டால் இடம்பெறும்.
60க்கும் மேற்பட்ட 'புட் கோர்ட்'களில் சைவ, அசைவ உணவு வகைகள்,ஐஸ்கிரீம் வகைகள், அண்ணாச்சி விலாஸின் 10 வகை இட்லிகள், உளுந்து சிப்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:
புதிதாக விநியோக உரிமம்பெற்று தொழில் செய்ய விரும்புவோர், தயாரிப்பு நிறுவனங்களிடம் கலந்துரையாடலாம். இதற்கென பிரத்யேக ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில் தேனீ வளர்ப்பு, உணவுப்பொருள் பேக்கிங் இயந்திரங்கள் குறித்தும் நேரடி விளக்கம் பெறலாம் என்றார்.
பார்வையாளர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன்கள், வீட்டுஉபயோக பொருட்கள், சுங்குடி சேலைகள் என பரிசு பொருட்கள் குலுக்கல் முறையில் வழங்கப்பட உள்ளது. டிச. 25 மாலை சிறப்பு பரிசாக ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள ஆன்ட்ராய்டு டேப்லட் 2 பேருக்கும், பம்பர் பரிசாக ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள டூவீலர் ஒருவருக்கும் அமைச்சர் மூர்த்தி வழங்க உள்ளளார். கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன் பங்கேற்கின்றனர்.
தினமும் காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம். கண்காட்சி தலைவர் மாதவன், துணைத் தலைவர்கள் திருமுருகன், சூரஜ் சுந்தர சங்கர், வினோத்கண்ணா, ஒருங்கிணைப்பாளர் வேல்சங்கர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

