/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமுக்கத்தில் வர்த்தக கண்காட்சி இன்று நிறைவு
/
தமுக்கத்தில் வர்த்தக கண்காட்சி இன்று நிறைவு
ADDED : டிச 25, 2024 05:23 AM
மதுரை : மதுரை தமுக்கத்தில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடக்கும் வர்த்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
வீட்டு உபயோக பொருட்கள், மின்னணு சாதனங்கள், வீடு கட்டுமானங்கள், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி உட்பட 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அறுபதுக்கும் மேற்பட்ட 'புட் கோர்ட்'களில் சைவ, அசைவ உணவு வகைகள், ஐஸ்கிரீம் வகைகள், இனிப்பு, கார வகைகளுடன் மசாலா பொருட்கள், ஹோம் மேட் சாக்லேட்கள், செக்கு எண்ணெய், ஆர்கானிக் உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், சிறுதானிய உணவுகள் இடம்பெற்றுள்ளன.
பார்வையாளர்களை கவர தினமும் மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, 6:00 மணி, இரவு 7:00 மணி, 8:00 மணிக்கு குலுக்கல் நடத்தி பரிசு வழங்கப்படுகிறது. ரூ.15 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன்கள், வீட்டு உபயோக பொருட்கள், மெத்தைகள், சுங்குடி சேலைகள் பரிசாக வழங்கப்படுகிறது. இன்றுடன் நிறைவு பெறும் கண்காட்சியை காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
பதிவெண் சொன்னால் தெரிந்துவிடும்
போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை விழிப்புணர்வு குறித்த ஸ்டால் நேற்று திறக்கப்பட்டது. கமிஷனர் லோகநாதன் திறந்து வைத்தார். துணை கமிஷனர் வனிதா, சங்க நிர்வாகிகள் ஜெயப்பிரகாசம், வேல்சங்கர், சூரஜ் சுந்தர் சங்கர், வினோத்கண்ணா, கூடுதல் துணைகமிஷனர் திருமலைக்குமார், உதவிகமிஷனர்கள் செல்வின், இளமாறன், இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்ராம், ஷோபனா பங்கேற்றனர்.
இந்த ஸ்டாலில் நமது வாகன பதிவெண்ணை கூறினால் போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா, இல்லையா என அறிந்துக்கொள்ளலாம்.

