/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழிற் சங்கங்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம்
/
தொழிற் சங்கங்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 07, 2025 04:41 AM

மதுரை: புதிய, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டங்களை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மதுரையில் ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவாயில் அருகே டி.ஆர்.இ.யூ., சி.ஐ.டி.யூ., ரயில்வே தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைமை வகித்த டி.ஆர்.இ.யூ., கோட்டத் தலைவர் ராஜு கூறியதாவது : வளர்ந்த நாடுகளில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. இங்கே ஓய்வு காலத்திலும் நியாயத்தை பெற போராட வேண்டியுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டமா, ஒருங்கிணைந்த திட்டமா என 'ஆப்ஷன்' தருகின்றனர். பழைய திட்டம் பற்றி வாயே திறப்பதில்லை. தொழிலாளர்களின் விருப்பப்படி பழைய திட்டத்தை அமல்படுத்துவதே அரசின் கடமை என்றார்.