/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம், மறியல் 846 பெண்கள் உட்பட 2149 பேர் கைது
/
மதுரையில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம், மறியல் 846 பெண்கள் உட்பட 2149 பேர் கைது
மதுரையில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம், மறியல் 846 பெண்கள் உட்பட 2149 பேர் கைது
மதுரையில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம், மறியல் 846 பெண்கள் உட்பட 2149 பேர் கைது
ADDED : ஜூலை 10, 2025 02:59 AM

மதுரை: மதுரையில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. 846 பெண்கள் உட்பட 2149 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., தொ.மு.ச., எல்.பி.எப்., எச்.எம்.எஸ்., உட்பட 10 தொழிற்சங்கங்கள் இணைந்து பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில் அருகே எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓடும் தொழிலாளர் பிரிவு செயலாளர் அழகுராஜா தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் ரபீக், உதவி செயலாளர் ராம்குமார் ஆகியோர் பேசினர். கோட்ட தலைவர் ரவிசங்கர், உதவி செயலாளர்கள் சபரி வாசன், செந்தில், கிளைச் செயலாளர்கள் சீனிவாசன், தனசேகரன், பொன்குமார், திலக் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். டி.ஆர்.இ.யூ., சார்பில் கிளைப் பொருளாளர் ஹரிகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டத் தலைவர் ராஜு, செயலாளர் சிவக்குமார், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் லெனின், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி மாநில துணைத்தலைவர் மகபூப்ஜான் கலந்து கொண்டனர். என்.எப்.ஐ.ஆர்., - எஸ்.ஆர்.இ.எஸ்., சார்பில் கோட்டச் செயலாளர் நாகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. துணைப் பொதுச் செயலாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார். செயல் தலைவர் நாராயண பிரசாத், துணைச் செயலாளர்கள் எட்வின் பிரபு, சஜன் ஆகியோர் பேசினர். கிளைச் செயலாளர்கள் முருகன், செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
'ஆப்சென்ட்'
கலெக்டர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் முருகையன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், சந்திரபோஸ், பாண்டி, பொற்செல்வன், ஜோயல்ராஜ், தமிழ் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட அளவில் வருவாய்த்துறையினர் 450க்கும் மேற்பட்டோர் 'ஆப்சென்ட்' ஆகி ஆதரவு தெரிவித்தனர்.
திருநகரில் வங்கி முன்பு சி.ஐ.டி.யூ., மாவட்ட துணை செயலாளர் பாண்டி தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டதாக மதுரை நகரில் 446 பெண்கள் உட்பட 1339 பேரும், புறநகரில் 400 பெண்கள் உட்பட 810 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அலங்காநல்லுார்
ஸ்டேட் பாங்க் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்க மாவட்ட தலைவர் தவமணி, விவசாய தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் மாயாண்டி, இந்திய தொழிற்சங்க மையம் பாலமுருகன் தலைமையில் போராட்டம் நடந்தது. சமயநல்லுாரில் மதுரை மேற்கு ஒன்றிய குழு சார்பில் போஸ்ட் ஆபீஸ் முன் விவசாய தொழில் சங்க மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன் தலைமையில் போராட்டம் நடந்தது.
உசிலம்பட்டி
ஸ்டேட் பாங்க் முன்பு மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சமயம், தொழிற்சங்க நிர்வாகிகள் சிவக்குமார், நல்லமூர்த்தி, பாண்டி, பழனி, அய்யங்காளை, சுரேஷ், சின்னச்சாமி, அறிவு உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்லம்பட்டி போஸ்ட் ஆபீஸ் முன்பாக விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் குருசாமி, ரத்தினம், காசி, தெய்வம், ஜெயபிரகாஷ், சிவனம்மாள் உட்பட 245 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலுார்
போஸ்ட் ஆபீஸ் முன் சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் கரும்பு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் பழனிச்சாமி, நிர்வாகிகள் மணவாளன், ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேரையூர்
டி. கல்லுப்பட்டியில் சி.ஐ.டி.யு உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 13 பெண்கள் உட்பட 54 பேர் மதுரை- ராஜபாளையம் ரோட்டில் 10 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர்.
சோழவந்தான்
ஸ்டேட் வங்கி அருகே விவசாய சங்க மாவட்டத் தலைவர் வேல்பாண்டி தலைமையில் மறியல் நடந்தது. சி.ஐ. டி.யூ., ஒன்றிய தலைவர் கணேசன், செயலாளர் பொன்ராஜ் விவசாயிகள் சங்கம் கந்தவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமயநல்லுார்
மா. கம்யூ.,வினர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன் தலைமையில் மறியல் நடந்தது. சி.ஐ.டி.யூ., ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் மனோகரன், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அலங்காநல்லுார்
ஸ்டேட் வங்கி முன் மா.கம்யூ.,வினர் விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் மாயாண்டி தலைமையில் மறியல் நடந்தது. விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சேது ராஜன், சுமைப்பணி சங்கம் கருப்புச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
திருமங்கலம்
மா.கம்யூ., கட்சி சார்பில் ரயில்வே ஸ்டேஷன் முன் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பொது தொழிலாளர் சங்க செயலாளர் சித்திரவேல் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.

