/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வணிகர் சங்கங்கள் டிச.11 ல் ஆர்ப்பாட்டம்
/
வணிகர் சங்கங்கள் டிச.11 ல் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 28, 2024 05:33 AM
மதுரை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மத்திய, மாநில அரசுகளின் வரி உயர்வை கண்டித்து டிச.11ல் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.
வணிக கட்டடத்தின் மீதான மத்திய அரசின் ஜி.எஸ்.டி., வரிவிதிப்பை கண்டித்து டில்லியில் அடுத்த வாரம் நடக்கவுள்ள அகில இந்திய வணிகர் சம்மேளன கலந்தாய்வு கூட்டம் நடக்க உள்ளது.
அதன் பின் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்படும் என மண்டலத் தலைவர் செல்லமுத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ''வணிக கட்டடங்களின் மீதான ஜி.எஸ்.டி., வரியை எதிர்த்து தமிழகத்தில் டிச. 11 ல் மாவட்ட தலைவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
மாநில அரசுக்கு எதிராக 6 சதவீத சொத்து வரி உயர்வு, வணிக உரிமக் கட்டணம் தொழில் வரி உயர்வு, குப்பை வரியை எதிர்த்து அதேநாளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்றார்.