/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வியாபாரிகள் ஆக்கிரமிப்பு மேலுார் மக்கள் தவிப்பு
/
வியாபாரிகள் ஆக்கிரமிப்பு மேலுார் மக்கள் தவிப்பு
ADDED : ஜன 25, 2025 06:51 AM

மேலுார் : மேலுார் மெயின் ரோட்டை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால் மக்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
ரோட்டின் இருபுறமும் வியாபாரிகள் கடை அளவை 5 அடிக்கு மேல் நீட்டி ஆக்கிரமித்துள்ளனர். கடைக்கு முன்பு சில வியாபாரிகள் வாடகைக்கும் விட்டுள்ளனர். கடை விளம்பர பலகையை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் ரோட்டோரத்தில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
மக்கள் கூறியதாவது: ஆக்கிரமிப்பால் ரோட்டில் செல்லும்போது வாகனம் மோதி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவதும், சில நாட்களிலேயே மீண்டும் வைப்பதும் வழக்கமாகி விட்டது.
இனியாவது முறையான அளவீடு செய்து மீண்டும் ஆக்கிரமிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.