/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மத்திய பட்ஜெட்டில் கூட்டாண்மை நிறுவனங்களின் வரி குறைப்பு வியாபாரிகள் எதிர்பார்ப்பு

ADDED : ஜன 04, 2026 05:05 AM
மதுரை: 'மத்திய பட்ஜெட்டில் கூட்டாண்மை நிறுவனங்களுக்கான வரிவிகிதத்தை குறைக்க வேண்டும்' என தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம் கூறியதாவது: வெவ்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் சிறிய மூலதனம், வங்கி கடன் வாங்கிதான் கூட்டாண்மை நிறுவனங்களை நடத்துகின்றனர். ஆனால் இந்நிறுவனங்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அதை 20 சதவீதமாக குறைக்க வேண்டும். அல்லது நிறுவனங்கள் அறிவிக்கும் வருமானத்திற்கு ஏற்ப குறைந்த வரி விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும்.
அரசின் வழிகாட்டுதல் மதிப்புடன் ஒப்பிடும்போது நிலத்தின் சந்தை விலை பலமடங்கு அதிகமாக உள்ளதால் மொத்த வணிக பங்குதாரர்கள் நகரத்திற்கு வெளியே தங்கள் வணிக நிறுவனங்களுக்கு நிலம் வாங்க முடியவில்லை. வணிக நிறுவனங்களை புனரமைக்கவும், நிர்மாணிக்கவும் 100 சதவீத தொகையில் மத்திய அரசு 50 சதவீத மானியம் வழங்க வேண்டும். 25 சதவீத தொகையை வங்கிக் கடனாக தந்தால் பங்குதாரர்கள் 25 சதவீதத்தொகையை செலுத்த முடியும்.
மொத்த வியாபாரிகள், வணிகர்கள் வணிக இடங்களை புறநகருக்கு மாற்றுவதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். இதை மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்றனர்.