ADDED : டிச 12, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நுகர்பொருள் அண்ட் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் மோகன், செயலாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளதாவது:
பெரிய நிறுவனங்கள் வருகையால் சிறிய வியாபாரிகள் கடைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர் கஷ்டப்பட்டு கடைகளை நடத்தி வருகின்றனர்.
அவர்களை மேலும் சிரமத்திற்குள்ளாக்கும் வகையில், வாடகை கடைகளுக்கும் ஜி.எஸ்.டி., வரிவிதிக்கப்பட்டுள்ளது.
உடனே இவ்வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும். பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது விதித்துள்ள ஜி.எஸ்.டி., வரியையும் குறைக்க வேண்டும். வணிகர்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் இனியாவது முன்வரவேண்டும், என தெரிவித்துள்ளனர்.

