/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வருமான வரித்துறை உத்தரவை ரத்து செய்ய வர்த்தகர்கள் மனு
/
வருமான வரித்துறை உத்தரவை ரத்து செய்ய வர்த்தகர்கள் மனு
வருமான வரித்துறை உத்தரவை ரத்து செய்ய வர்த்தகர்கள் மனு
வருமான வரித்துறை உத்தரவை ரத்து செய்ய வர்த்தகர்கள் மனு
ADDED : பிப் 15, 2024 05:43 AM
மதுரை: சிறு, குறு நிறுவனங்கள், வியாபாரிகளை பாதிக்கும் வருமான வரித்துறையின் செக் ஷன் 43 பி (எச்) அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்'' என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம், தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய்சுப்ரமணியம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர்கள் அனுப்பியுள்ள மனு: வருமான வரித்துறை அறிவிப்பான செக் ஷன் 43பி(எச்) ஆல் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகர்கள் இந்தாண்டு செலுத்த வேண்டிய பில்களின் தொகையை, குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்தாவிடில் லாபத்தில் சேர்த்து, செலவினமாக ஏற்கப்படமாட்டாது என்று உள்ளது.
இவ்வறிவிப்பு வெளியானதும், பன்னாட்டு நிறுவன ஏஜன்டுகள் சிறு, குறுந்தொழில் அதிபர்கள், வியாபாரிகளிடம் தாங்கள் கொள்முதல் செய்ய நிதிஉதவி வழங்க தயாராக இருப்பதாக கூறுகின்றனர். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, பன்னாட்டு நிறுவன மால்களில் வருகையால் பாதித்துள்ள சூழலில் சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சி வருமான வரித்துறை அறிவிப்பால் பாதிக்கும். எனவே இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

