/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கழிப்பறைக்கு மணிக்கணக்கில் காத்திருக்கும் வியாபாரிகள்; மதுரை சென்ட்ரல் மார்க்கெட் அவலம்

ADDED : ஜூன் 17, 2025 01:17 AM

மதுரை : மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் உள்ள மாநகராட்சியின் 2 கழிப்பறைகளும் 15 நாட்களாக பூட்டிக் கிடப்பதால் வியாபாரிகள்3வது கழிப்பறையை பயன்படுத்த அரைமணி நேரம் வரிசையில் காத்திருக்கும் அவலம் உள்ளது.
இந்த மார்க்கெட்டில் வியாபாரிகள், பணியாளர்கள் உட்பட 2000 பேர் வேலை செய்கின்றனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள், நுகர்வோர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு போதுமான கழிப்பறை இல்லாததால் பெரும்பாலானோர் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். இதனால் மார்க்கெட்டே நாற்றமெடுக்கிறது என்கிறார் மாட்டுத்தாவணி அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன்.
அவர் கூறியதாவது:
மத்திய அரசு திட்டத்தில்ஒன்று, மாநகராட்சி சார்பில்2 கழிப்பறைகள் இங்குள்ளன. நபருக்கு ரூ.6 கட்டணம் செலுத்தினால்தான் பயன்படுத்த முடியும். 15 நாட்களாக மாநகராட்சியின் 2 கழிப்பறைகள் பூட்டிக் கிடக்கின்றன. ஒப்பந்ததாரரிடம் கேட்டால்'மோட்டார், விளக்குகளைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தை மின்வாரியத்திற்கு மாநகராட்சி செலுத்தாததால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வசதியில்லாததால் மூடப்பட்டுள்ளது' என்கிறார்.
மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டால் சரிசெய்ய சொல்கிறேன் என்கிறார். ஒற்றை கழிப்பறைக்குள் செல்ல அரைமணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
இயற்கை உபாதையைஅடக்க முடியாத சிலர் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதால் துர்நாற்றம் வீசுகிறது. மின்கட்டணத்தை செலுத்தி கழிப்பறையை திறக்க மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.