/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.30ல் விலையில்லா வேட்டி, சேலை பேரையூரில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள்
/
ரூ.30ல் விலையில்லா வேட்டி, சேலை பேரையூரில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள்
ரூ.30ல் விலையில்லா வேட்டி, சேலை பேரையூரில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள்
ரூ.30ல் விலையில்லா வேட்டி, சேலை பேரையூரில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள்
ADDED : ஜன 15, 2024 04:05 AM
பேரையூர், : பொங்கலுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கிய விலையில்லா வேட்டி, சேலைகளை தலா ரூ.30 விலையில் வீடுகளுக்கே வந்து வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு ஏழை, எளியோருக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை ஒரு கரும்பு, ரூ.1000 ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.
விலையில்லா வேட்டி, சேலைகளை பழைய இரும்பு வாங்கும் வியாபாரிகள் வீடுகளுக்கே வந்து வேட்டி, சேலைகளை தலா ரூ.30 க்கு வாங்கிச் செல்கின்றனர். இவை பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. துவைத்தால் சுருங்கி விடுவதாகவும், எனவே வியாபாரிகளிடம் விற்பதாகவும் கூறினர்.
வியாபாரிகள் சிலர் கூறியதாவது. வேட்டி சேலைகளை ரூ.30க்கு வாங்கி, மொத்த வியாபாரிகளிடம் ரூ.5 லாபத்தில் விற்றவிடுவோம். அவர்கள் துணிப் பை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர், என்றனர்.
விலையில்லா வேட்டி, சேலைகளுக்காக தமிழக அரசு ரூ.238 கோடி ஒதுக்கி, அதில் ஒரு கோடியே 68 லட்சம் சேலைகளை 15 ரகங்களிலும், ஒரு கோடியே 63 லட்சம் வேட்டிகளை 5 ரகங்களிலும் தயாரிப்பாளர்களிடம் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கிறது. மக்கள் பயன்படும் வகையில் தரமான முறையில் வழங்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மாவட்ட பா.ஜ., அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு தலைவர் சோமசுந்தரம் கூறுகையில், 'அடுத்த ஆண்டாவது தரமான வேட்டி, சேலைகளை அரசு வழங்க வேண்டும்'' என்றார்.